தோல்வியின் பழியை பனி மீது போட்டு எஸ்கேஎப் ஆன சிஎஸ்கே, 3-வது போட்டியில் வலுவாக சிக்கிய பரிதாபம்

CSK Dew Excuse
- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மார்ச் 3-ஆம் தேதியன்று நடைபெற்ற 11-வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னையை எதிர்கொண்ட பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180/8 ரன்கள் விளாசியது.

Livingstone

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட அதிரடியாக 60 ரன்களை விளாசினார். சென்னை சார்பில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

சென்னை படுமோசமான தோல்வி:
அதை தொடர்ந்து 181 என்ற இலக்கை துரத்திய சென்னை பஞ்சாப் பவுலர்களின் துல்லியம் நிறைந்த அதிரடியான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆரம்பம் முதலே சீட்டுக்கட்டு சரிவது போல மளமளவென தங்களது விக்கெட்டுகளை பரிசளித்தது. அந்த அணிக்கு ருதுராஜ் 1, உத்தப்பா 13 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அடுத்து வந்த மொயீன் அலி மற்றும் கேப்டன் ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் அம்பத்தி ராயுடு 13 (21) ரன்களில் ஏமாற்றியதால் 36/5 என படுமோசமான தொடக்கத்தை பெற்ற சென்னையின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது.

PBKS vs CSK

அதனால் 100 ரன்களைக் கூட தாண்டாது என எதிர்பார்த்த அந்த அணிக்கு இளம் வீரர் சிவம் துபே அதிரடியாக 30 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 57 ரன்களை விளாசி ஓரளவு மானத்தைக் காப்பாற்றினார். அவருடன் வெற்றிக்காக 23 (28) ரன்களுடன் போராடிய எம்எஸ் தோனியும் ஆட்டமிழந்ததால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சென்னை 126 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

பனி மீது பழி:
இந்த படுதோல்வியால் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ள சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்து வரலாற்றில் மிக மோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடும் நடப்புச் சாம்பியன் சென்னை எப்படி கோப்பையை தக்க வைக்கப்போகிறது என்ற கவலை அந்த அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Fleming

முன்னதாக இந்த தொடரில் கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு எதிரான தங்களின் முதல் 2 போட்டிகளில் டாஸ் இழந்த காரணத்தால் முதலில் பேட்டிங் செய்தது சென்னையின் தோல்விக்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஏனெனில் இந்த தொடர் நடைபெறும் மும்பை நகரில் அதுவும் இரவு நேர போட்டிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2-வதாக பந்துவீசும் அணிகள் கச்சிதமாக பந்தை பிடித்து துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க முடிவதில்லை. அந்த சூழ்நிலையை முதல் 2 போட்டிகளில் எதிர்கொண்ட சென்னை மோசமாக பந்துவீசி பரிதாபமாக தோற்றது. அதன் காரணமாக முதல் 2 போட்டிகளில் தோற்றதற்கு பனி தான் காரணம் என தோல்வியின் பழியை பனி மீது போட்டு சென்னை நிர்வாகம் தப்பித்தது.

- Advertisement -

வசமாக சிக்கிய பரிதாபம்:
குறிப்பாக இரவு நேரத்தில் “ஸ்விம்மிங் பூல்” போல பனி இருந்தால் எப்படி வெற்றி பெற முடியும் என்பது போல் லக்னோவுக்கு எதிரான 2-வது போட்டியில் தோற்ற பின் சென்னையின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ஐபிஎல் நிர்வாகம் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியின் போது ப்ராபோர்ன் மைதானத்தில் பனியின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒருசில ரசாயனத்தை போட்டியின் இடையிடையே ரோலரை பயன்படுத்தி மைதானம் முழுவதும் தெளித்தது. அதன் காரணமாக அந்தப் போட்டியில் பனி இருந்த போதிலும் அது முந்தைய போட்டிகளை போல பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

CSK vs PBKS 3

அப்படிப்பட்ட நிலையில் முந்தைய போட்டிகளில் பனி மீது பழியைப் போட்டு தப்பித்த சென்னை பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் வலுவாக சிக்கியது. ஏனெனில் அந்த போட்டியில் இந்த தொடரில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்த போதிலும் சென்னை பவுலர்கள் பனி வருவதற்கு முன்பாகவே ரன்களை வாரி வழங்கினார்கள்.

- Advertisement -

அதன்பின் சேசிங் செய்தால் கிட்டதட்ட வெற்றி உறுதி என்ற நிலையில் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 181 என்ற இலக்கை சேசிங் செய்யும் போது படுமோசமாக செயல்பட்டதால் சென்னை மீண்டும் தோல்வி அடைந்தது. 3-வது போட்டியில் செயற்கையாக முடிந்த அளவுக்கு பனி கட்டுபடுத்த பட்டதால் அந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் பழியை பனிமீது சென்னை அணி நிர்வாகத்தால் போட முடியவில்லை.

இதையும் படிங்க : நடப்பு ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் தெரியுமா?

மொத்தத்தில் சென்னை அணியின் அடுத்தடுத்து தோல்விகளுக்கு அந்த அணி குற்றம் சாட்டிய பனி காரணம் கிடையாது என்பதும் அந்த அணியில் உள்ள வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறியது தான் முழுமுதற் காரணம் என்பதும் இதிலிருந்து அம்பலமாகியுள்ளது.

Advertisement