நடப்பு ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் தெரியுமா?

IPL 2022 (2)
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி தற்போது வரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடைபெறாத ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முற்றிலுமாக இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான சரியான அட்டவணைகளும் வரையறுக்கப்பட்டது.

ipl

- Advertisement -

அதன்படி தற்போது மும்பை மற்றும் புனே ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று வரும் போட்டிகளில் எந்த ஒரு குறையுமின்றி, பிரச்சனையும் இன்றி சிறப்பாக நடைபெற்று வரும் வேளையில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து பிளே சுற்றுப்போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் பிசிசிஐ தற்போது பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்தான உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று முடியும் வேளையில் அடுத்ததாக மைதானங்கள் மாற்றப்படுகின்றன.

motera

அதன்படி எலிமினேட்டர் போட்டியும், குவாலிபயர் 1 போட்டியும் லக்னோவில் உள்ள ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடத்தப்படும் என்றும் இரண்டாவது எலிமினேட்டர் போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய மைதானமாக மோதிரா மைதானத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்த விடயத்திற்க்கான விளக்கம் தெளிவாக கிடைத்துள்ளது. லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்த வேளையில் அந்த இரு நகரங்களை சார்ந்து இந்த பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெக்கான் சார்ஜர்ஸ் இருந்திருந்தால் மும்பைக்கு 5 கப் கிடைத்திருக்காது. ரோஹித் கேப்டனான கதையை பகிர்ந்த வீரர்

நடப்பு சாம்பியனாக இருந்து வரும் சி.எஸ்.கே அணியானது இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. அதேவேளையில் மும்பை அணியும் தங்களது முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement