இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இதுவரை 14 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இப்படி இந்த பதினான்கு ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு ஜாம்பவான் அணியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்றுள்ள சீசன்களில் ஒருமுறை தவிர்த்து மற்ற அனைத்து முறையும் பிளே-ஆப் சுற்றுக்கு சென்ற ஒரு அணியாகவும், நான்கு முறை கோப்பையை கைப்பற்றி அதிக முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய இரண்டாவது அணி என்ற சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது.

எப்போதுமே சென்னை அணி ஐபிஎல்-லை பொருத்தவரை ஒரு பலம்வாய்ந்த அணி என்றால் அது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் நடைபெற்று முடிந்த அனைத்து சீசன்களிலும் சென்னை அணிக்காக ஒரே கேப்டனாக இருந்து வரும் எம்எஸ் தோனி தற்போது வயது முதிர்வு காரணமாக இறுதி கட்டத்தில் இருப்பதால் இந்த ஆண்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டன் செயல்படுவார்கள் என்று பலராலும் பேசப்பட்டது.
அதுமட்டுமின்றி புதிய கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என்றும் இனி வரும் இளம் வீரர்களை கொண்ட அணியை அவர் வழிநடத்த வேண்டும் என்பதன் காரணமாக இந்த ஆண்டு அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று பல கருத்துக்கள் இருந்து வந்தன.

ஆனால் தற்போது இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை அணியின் தரப்பில் இருந்து தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவலின் படி இந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக தல தோனி தான் செயல்படுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தோனியின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி என்றே கூறலாம்.
இதையும் படிங்க : ஷிகர் தவானின் 18 வருட மாஸ் சாதனையை தகர்த்து புதிய உலகசாதனை படைத்த தெ.ஆ இளம் வீரர் – அடுத்த ஏபிடி வந்தாச்சு
ஏனெனில் தோனியை கேப்டனாகவே பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு சாதாரணமாக வீரராக பார்க்க மனம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டும் தோனி கேப்டனாக செயல்பட இருப்பது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்றே கூறலாம்.



