அக்டோபர் 31-ஆம் தேதி இன்று மாலை 5 மணிக்குள் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை இறுதியாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகம் அனைத்து அணி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டது. அந்த வகையில் அனைத்து அணிகளுமே தற்போது தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை இறுதிப் படுத்தியுள்ளனர்.
சி.எஸ்.கே அணி வீரர்களின் பட்டியல் :
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பலரது மத்தியிலும் இருந்த பெரிய கேள்வியாக இருந்து வந்தது. ஆனால் ரசிகர்களுக்காக நிச்சயம் ஒரு ஆண்டு தோனி விளையாடுவார் என்று பலரும் பேசி வருகின்றனர்.
ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகமோ அல்லது தோனியோ இதுகுறித்த முடிவை வெளியிடவில்லை. இருப்பினும் இன்று மாலை அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி தோனி அன் கேப்டு வீரராக தக்கவைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் தோனி அன் கேப்டு வீரராக 4 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்படும் பட்சத்தில் மீதமுள்ள நான்கு வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடை 18 கோடிக்கும், ரவீந்திர ஜடேஜாவை 14 கோடிக்கும், ஷிவம் தூபேவை 11 கோடிக்கும், நான்காவது வீரராக மதீஷா பதிரானாவை 18 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி தக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஐந்து வீரர்களையும் தக்க வைக்கும் பட்சத்தில் சென்னை அணி 65 கோடிகளை முன்கூட்டியே செலவு செய்து விடும். இதன் காரணமாக மீதமுள்ள 55 கோடி ரூபாய் கையிருப்புடன் ஏலத்திற்கு செல்லும். அப்படி ஏலத்திற்கு செல்லும்போது ஆர்.டி.எம் கார்டு மூலமாக தீபக் சாஹரை அவர்கள் வாங்குவார்கள் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : 51 ரன்ஸ் 7 விக்கெட்ஸ்.. இதெல்லாம் ஒரு சரிவா? பும்ராவுக்கு 3வது போட்டியில் ஓய்வா? அபிஷேக் நாயர் பேட்டி
மீதமுள்ள தொகைக்கு மற்ற வீரர்கள் வாங்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது. சென்னை அணிக்காக மேலும் ஒரு சீசன் தோனி விளையாட இருப்பது ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி பரிசாகவே காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.