51 ரன்ஸ் 7 விக்கெட்ஸ்.. இதெல்லாம் ஒரு சரிவா? பும்ராவுக்கு 3வது போட்டியில் ஓய்வா? அபிஷேக் நாயர் பேட்டி

Abhishek Nayar 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை விளையாடிய 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அது போக 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் மிரட்டி வந்த இந்தியாவின் வெற்றி நடையும் முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் நியூஸிலாந்து ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திண்டாடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் கடைசி 7 விக்கெட்டுகளுக்கு வெறும் 51 ரன்கள் மட்டும் எடுத்த இந்தியா சீட்டுக்கட்டு போல சரிந்தது. அதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் போராடியும் இந்தியா தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

இதெல்லாம் சரிவா:

இந்நிலையில் 51 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழப்பது ஒரு சரிவல்ல என்று இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அது போன்ற மோசமான பேட்டிங்கை வருங்காலத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கான வழியை கண்டறிவோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 3வது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் அதை சரிவு என்று சொல்ல மாட்டேன். நீங்கள் விக்கெட்டுகளை அதிகமாக இழப்பது அல்லது எடுப்பது போன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் அவ்வப்போது நடக்கும். குறிப்பாக கடந்த போட்டியில் நாங்கள் 51 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது போன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம். அது மனநிலையைப் பொறுத்தது”

- Advertisement -

பும்ராவுக்கு ஓய்வு அல்ல:

“சில நேரங்களில் அது மனநிலை. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது ஆக்ரோஷமாக இருக்க முயற்சிப்பதாகவோ அல்லது உள்நோக்கத்துடன் இருக்க முயற்சிப்பதாகவோ தெரியலாம். ஆனால் நோக்கம் என்பது பந்தில் ஸ்விங் செய்ய வேண்டிய அவசியமில்லை. அது கவலையை ஏற்படுத்தக் கூடிய விஷயமா? என்று கேட்டால் நிச்சயம் அது போன்ற விஷயங்களை தவிர்க்க நாங்கள் முயற்சி செய்வோம்”

இதையும் படிங்க: இந்தியா – நியூஸிலாந்து 3வது டெஸ்ட் நடைபெறும் மும்பை மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“அது தான் எங்களுடைய செயல்முறை. பும்ரா அதிகமாக பந்து வீசவில்லை. அவருக்கு போட்டியின் இடையே போதுமான ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய பணிச்சுமை எப்போதும் எங்களுடைய மனதில் இருக்கிறது. மும்பையில் காலை நேரத்தில் ஸ்விங் வேகம் இருக்கும். அங்கே வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது முகத்தில் சிரிப்பை கொண்டிருப்பார்கள். எங்கள் அணியில் ஹர்ஷித் ராணா போன்ற புதிய வீரர்கள் சேர்க்கப்படவில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் பற்றி நாங்கள் அதிகமாக கவலைப்படாமல் 3வது போட்டியில் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார்.

Advertisement