இந்த 2021 ஐ.பி.எல் தொடர் தான் தோனிக்கு லாஸ்ட் சீசனா ? – சி.எஸ்.கே நிர்வாகியை காசி விஸ்வநாதன் பேட்டி

Kasi
- Advertisement -

2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனி மிகப்பெரிய வெற்றிகளை வாங்கிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி தான்.
சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் லீக் தொடரில் மகேந்திர சிங் தோனி அவ்வளவு சரியாக விளையாடவில்லை. மொத்தமாக 14 போட்டிகளில் விளையாடிய மகேந்திர சிங் தோனி வெறும் 200 ரன்கள் மட்டும் தான் குவித்து இருந்தார்.

Dhoni

- Advertisement -

அவரது ஸ்ட்ரைக் ரேட் வழக்கத்திற்கு மாறாக மிகக்குறைவாக இருந்தது. இதன் அடிப்படையில் சென்ற ஆண்டுடன் அவர் தனது ஐபிஎல் தொடரை முடித்து கொள்வாரா என்கிற கேள்வி எழுந்தது.
கேள்விகளுக்கு தோனி நிச்சயமாக இல்லை என்று பதிலளித்தார். நான் அடுத்த ஆண்டு நிச்சயமாக விளையாடுவேன் என்று சென்ற ஆண்டே கூறிவிட்டார். தற்பொழுது இந்த ஆண்டுடன் மகேந்திரசிங் தோனி தனது ஐபிஎல் தொடரை முடித்து கொள்வாரா என்கிற கேள்வி மறுபடியும் எழுந்துள்ளது.

இது குறித்து பதிலளித்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன், 13 வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கி வருகிறார். இந்த ஆண்டுடன் அவர் தனது ஐபிஎல் தொடரை முடித்துக் கொள்வது போல் எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக அடுத்த ஆண்டும் அவர் விளையாடுவார் என்று நம்புகிறேன், என்று கூறியுள்ளார்.

Dhoni-1

மேலும் பேசிய காசிவிஸ்வநாதன் : சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக கடந்த ஆண்டு விளையாடவில்லை. இந்த ஆண்டு மீண்டும் சென்னை அணிக்காக களம் இறங்க உள்ளார்.அவர் தற்போது கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். கடைசியாக அவர் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடினார்.

Dhoni

நிச்சயம் இந்த ஆண்டு அவர் சென்னை அணிக்கு மிகப்பெரிய அளவில் பழையபடி விளையாடுவார் என்று நம்புகிறோம் என்றும் கூறி முடித்தார். இதனால் தோனிக்கு மேலும் சில ஆண்டுகள் சி.எஸ்.கே அணிக்காக விளையாட விருப்பம் உள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement