தோனி கூறிய அந்த வார்த்தைகள் தான் சி.எஸ்.கே அணியின் கம்பேக்கிற்கு காரணம் – காசி விஸ்வநாதன் பகிர்வு

Kasi
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் தொடர் நடைபெற்றபோது முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்து சிஎஸ்கே அணி வெளியேறியது. அப்போது சிஎஸ்கே அணியில் வயது மூத்த வீரர்கள் அதிகம் இருந்ததால் இனிமேல் சிஎஸ்கே அணி வேலைக்காகாது என்று பல விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அந்தத் தொடரின் இறுதியில் தோனி நிச்சயம் நாங்கள் அடுத்த ஆண்டு மிகவும் பலமாக திரும்பி வருவோம் என்று உறுதியளித்திருந்தார்.

csk

- Advertisement -

அதன்படி இந்த ஆண்டு அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் மிரட்டலான ஆட்டத்தை சிஎஸ்கே அணி வெளிப்படுத்தி வருகிறது. நடைபெற்று முடிந்துள்ள 12 லீக் போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் சிஎஸ்கே அணி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரை கைப்பற்றவும் சிஎஸ்கே அணிக்கு பெரிய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இருந்த சிஎஸ்கே அணிக்கும் இப்போது இருக்கும் சிஎஸ்கே அணிக்கும் ஒரு பெரிய மாற்றம் என்பதே கிடையாது. கடந்த ஆண்டு இருந்த வாட்சன் ஓய்வு பெற்று வெளியேறிய பின்னர் மொயின் அலி புதிதாக அணியில் இணைந்து இருக்கிறார். அதைத்தவிர பெரிதளவு அணியில் மாற்றம் இல்லை என்றாலும் போன ஆண்டு சொதப்பிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு எவ்வாறு சாதித்தது என்பது குறித்து அந்த அணியின் தலைமை நிர்வாகி காசி விசுவநாதன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

csk 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஆண்டு துவக்கத்திலேயே தோனி அணி வீரர்களை ஒன்றிணைத்து ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் அணி வீரர்களிடம் அவர் : எப்போதும் கவலைப்படாதீர்கள். கடந்த ஒரு சீசன் நமக்கு மோசமாக அமைந்தது ஆனால் எல்லா ஆண்டும் அதே போன்று நடக்காது, நிச்சயம் நாம் இதிலிருந்து மீண்டு வர முடியும் என்று வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த போட்டியில் சி.எஸ்.கே அணியில் இவர் விளையாட வாய்ப்பில்லையா ? – இதை கவனிச்சீங்களா ?

அவர் கொடுத்த ஊக்கம் தற்போது வரை வீரர்களிடையே உள்ளதால் அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதால் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக விளையாடி வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement