IPL 2021 : முதல் போட்டியிலேயே டக் அவுட், அதுல இது வேறயா – தோனிக்கு விதிக்கப்பட்ட 12 லட்சம் அபராதம்

Dhoni
- Advertisement -

மிகுந்த பரபரத்துக்கு மத்தியில் தொடங்கியிருக்கும் ஐபிஎல் 14வது சீசனில் நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் தோனி தலமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும் அணியும், இளம் வீரரான பன்ட்டின் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஸ்ரேயாஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலக அஷ்வின், ரஹானே என மூத்த வீரர்கள் இருக்க கேப்டன் பொறுப்பை இளம் வீரரான பன்ட்டிடம் ஒப்படைத்தது டெல்லி நிர்வாகம். அதுவே இந்த போட்டிக்கு அதிகமான எதிர்பார்ப்பை கொடுத்தது.

cskvsdc

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல் நிர்வாகம். ஏனெனில் ஐபிஎல் 2021 நடத்தை விதிமுறைகளின் படி ஒரு மணி நேரத்திற்க்குள் 14.1 ஓவரை ஃபீல்டிங் செய்யும் அணி வீசியிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை 90 நிமிடங்களுக்குள் வீச வேண்டும். இதில் இருமுறை வழங்கப்படும் இடைவெளி நேரங்கள் அடங்காது.

இந்தப் போட்டியில் தோனி தலமையிலான சென்னை அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் காலதாமதமாக பந்து வீசிய காரணத்தால் சென்னை அணியின் கேப்டன் தோணிக்கு 12 இலட்சங்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இதுபோன்று இன்னொரு முறை நடந்தால் இரண்டு போட்டிகளில் விளையாட தோனிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் காலதாமதாக பந்து வீசியதால் அபராதம் விதிக்கப்படும் முதல் கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கியிருக்கிறார் தல தோனி. கடந்த சீசனில் கேப்டன்சியில் சொதப்பியி தோனி இந்த சீசனின் முதல் போட்டியிலேயே காலதாமதாக ஓவர் வீசிய கேப்டன் என்ற அவப்பெயருக்கும் உள்ளாகியிருப்பது சென்னை ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

dhawan

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. சென்னை தரப்பில் ரெய்னா, மொயீன் அலி, சாம் கரன் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 189 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 8 பந்துகள் மீதமிருக்கையில் 190 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி தரப்பில் ஓப்பனர்களான ப்ரித்வி ஷாவு, தவான் இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லியின் வெற்றிக்கு உதவினர்.

Advertisement