இந்த ஆண்டு 14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் போட்டிக்கு போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்கி வருகின்றனர். மேலும் இந்த ஏலத்தின் முடிவில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பதை பொறுத்தே அணியின் பலம் காணப்படும். அதனால் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் ஏலத்தினை கூட ரசிகர்கள் போட்டிகளை காண்பதை போல தற்போது மும்முரமாக கவனித்து வருகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையாக சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறிய நிலையில் இந்த ஆண்டாவது நல்ல வீரர்களை அணியில் தேர்வு செய்து சிஎஸ்கே அணி பலமடையும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்று ஏலம் அதிர்ச்சிகரமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக 9.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஒரு வீரர் குறித்து ரசிகர்கள் தற்போது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீரர்களின் கடந்த சில சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிருஷ்ணப்பா கவுதம் ஐபிஎல் தொடரில் மொத்தம் 24 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமன்றி 186 ரன்களை மட்டுமே அவர் அடித்துள்ளார். இப்படி ஒரு வீரரை இவ்வளவு தொகை வாங்கியது தேவையில்லாத ஒன்று என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 169 உள்ளதாலும் அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதனாலும் அவர் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பாக கிருஷ்ணமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்து இருந்து அவரது மோசமான ஆட்டம் காரணமாக இந்த ஆண்டு விடுவித்து இருந்தது.
LION ALERT! 🦁
Krishnappa
Gowtham
Firing soon in #Yellove!#KGF #WhistlePodu #Yellove #SuperAuction 💛🦁— Chennai Super Kings (@ChennaiIPL) February 18, 2021
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கான தொகையை அதிகரித்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்துள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.