DC vs CSK : எந்த வேடத்தில் வந்தாலும் அடிப்போம், டெல்லியை முதல் அணியாக வீழ்த்திய சிஎஸ்கே – பிளே ஆஃப்’க்கு சென்று மாஸ் கம்பேக்

DC vs CSK
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 20ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முக்கியமான 67வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு முதல் ஓவரிலிருந்தே நிதானமாகவும் அதிரடியாகவும் டெல்லி பவுலர்களை எதிர்கொண்ட தொடக்க வீரர்கள் டேவோன் கான்வே – ருதுராஜ் கைக்வாட் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினர்.

அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று அரை சதமடித்த அந்த ஜோடி 15 ஓவர்கள் வரை டெல்லிக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து 141 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது 3 பவுண்டரி 7 சிக்சருடன் ருத்ராஜ் 79 (50) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த சிவம் துபே 3 சிக்ஸருடன் 22 (9) ரன்கள் விளாசி தனது வேலையை செய்து அவுட்டான நிலையில் மறுபுறம் அசத்திய கான்வே 11 பவுண்டரி 3 சிக்சருடன் 87 (52) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அபார வெற்றி:
இறுதியில் ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 20* (7) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் சென்னை 223/3 ரன்கள் எடுத்து டெல்லிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து 224 என்ற பெரிய இலக்கை துரத்திய டெல்லிக்கு தடுமாற்றமாக செயல்பட்ட பிரித்திவி ஷா 5 (7) ரன்களில் ஓவரில் ராயுடுவின் சிறப்பான கேட்ச்சால் அவுட்டான நிலையில் அடுத்த வந்த பில் சால்ட்டை 4வது ஓவரில் 3 ரன்களில் அவுட்டாக்கிய தீபக் சஹார் அடுத்த பந்தில் ரிலீ ரோசவை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார்.

அதனால் 26/3 என தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் கேப்டன் டேவிட் வார்னர் தொடர்ந்து நங்கூரமாக நின்ற நிலையில் எதிர்புறம் வந்த யாஷ் துள் 4வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்டு 13 (15) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாட முயற்சித்து 15 (8) ரன்களில் அவுட்டாக அமன் கான் 7 (9) லலித் யதாவ் 6 (12) குல்தீப் யாதவ் 0 (1) என அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

இறுதியில் மறுபுறம் தனி ஒருவனாக போராடிய டேவிட் வார்னரும் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 86 (58) ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்களில் 146/9 ரன்களுக்கு டெல்லியை கட்டுப்படுத்தி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக தீபக் சஹர் 3 விக்கெட்டுகளும் பதிரான மற்றும் தீக்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் சாய்த்தனர்.

முன்னதாக நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற சென்னை பகல் நேரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதை சரியாக கணித்தது மட்டுமல்லாமல் சுமாராக பந்து வீசிய டெல்லியை திறம்பட எதிர்கொண்டு பெரிய ஸ்கோரை குவித்த போதே பாதி வெற்றி உறுதியானது. மீதி வெற்றியை டேவிட் வார்னர் தவிர்த்து இதர பேட்ஸ்மேன்களை ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகிய சென்னை பவுலர்கள் உறுதி செய்தனர்.

- Advertisement -

அதனால் 14 போட்டிகளில் 8வது வெற்றியை பதிவு செய்த சென்னை 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு 2வது அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது. குறிப்பாக கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து அவமானத்தை சந்தித்த சென்னை இம்முறை கொதித்தெழுந்து தங்களுடைய 14 சீசனில் 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று வெற்றிகரமான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

இதையும் படிங்க:வீடியோ : வரலாற்றின் உச்சகட்ட காமெடி – சிங்கிள் எடுப்பதில் சேட்டை, மிரட்டிய ஜடேஜாவுக்கு அவரது ஸ்டைலில் வார்னர் பதில்

அது போக ஸ்பெஷலான வானவில் ஜெர்சியை அணிந்து விளையாடிய 3 போட்டிகளிலும் இதற்கு முன் பெங்களூரு, மும்பை போன்ற அணிகளை வீழ்த்திய டெல்லியை எந்த வேடத்தில் வந்தாலும் அடிப்போம் என்ற வகையில் முதல் முறையாக தோற்கடித்துள்ள சென்னை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

Advertisement