வீடியோ : வரலாற்றின் உச்சகட்ட காமெடி – சிங்கிள் எடுப்பதில் சேட்டை, மிரட்டிய ஜடேஜாவுக்கு அவரது ஸ்டைலில் வார்னர் பதில்

Warner Jadeja
- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 20ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முக்கியமான 67வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் ஏற்கனவே வெளியேறிய டெல்லியை ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை எதிர்கொண்டது. அந்த நிலைமையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த சென்னைக்கு முதல் ஓவரிலிருந்தே நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய டேவோன் கான்வே – ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் ஓவருக்கு 10 ரன்கள் மேல் குவித்து விரைவாக ரன்களை சேர்த்தனர்.

நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று டெல்லி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 141 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் எடுத்த போது ருதுராஜ் 3 பவுண்டரி 7 சிக்ஸருடன் 79 (50) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த சிவம் துபே தனது பங்கிற்கு 3 பவுண்டரியுடன் 22 (9) ரன்கள் எடுக்க மறுபுறும் அசத்திய டேவோன் கான்வே 11 பவுண்டரி 3 சிக்சருடன் 87 (52) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ஜடேஜா 20* (7) ரன்கள் எடுத்ததால் சென்னை 20 ஓவர்களில் டெல்லிக்கு எதிராக வரலாற்றிலேயே அதிகபட்சமாக 223/3 ரன்கள் குவித்து சாதனையும் படைத்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து 224 ரன்களை துரத்திய டெல்லிக்கு தீபக் சஹர் வீசிய 5வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட பில் சால்ட் சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது எதிர்ப்புறம் இருந்த கேப்டன் டேவிட் வார்னர் ரன்கள் எடுப்பதற்கு ஓடி வந்த போது பந்தை எடுத்த மொய்ன் அலி ஸ்டம்ப்பை நோக்கி எரிந்ததால் டைவ் அடித்து சிங்களை முடித்தார். அதே சமயம் குறி தவறிய பந்தை பின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரகானே எடுத்தபோது மீண்டும் எழுந்த டேவிட் வார்னர் மற்றுமொரு ரன் கிடைக்குமா என்ற நோக்கத்துடன் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்தார். இருப்பினும் “என் கையில் பந்து இருப்பதை தெரிந்து கொண்டே வெளியே வருகிறீர்களா” என்ற வகையில் ரகானே ரியாக்சன் கொடுத்தார்.

அதற்கு “ஆமாம் முடிந்தால் ஸ்டம்பை சரியாக அடுத்து ரன் அவுட் செய்து காட்டுங்கள்” என்ற வகையில் டேவிட் வார்னர் பதிலுக்கு லேசாக தகிட தகிட நடனமாடி ரியாக்சன் கொடுத்தார். அப்போது “ஓஹோ அப்படியா” என்ற வகையில் ரகானே பந்தை எறிந்த போது மீண்டும் டேவிட் வார்னர் உள்ளே வந்தார். அதன் பின் அதை மறுபுறம் பின்பக்கத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜா பிடித்த போது மீண்டும் வெள்ளை கோட்டை விட்டு விளையாட்டுக்காக வேண்டுமென்றே வெளியே வந்த டேவிட் வார்னர் “உங்களால் முடிந்தாலும் அடித்துக் காட்டுங்கள்” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார்.

- Advertisement -

அதற்கு பந்தை அடிப்பது போலவே சென்ற ஜடேஜா கைகளையும் கால்களையும் நடனமாடுவது போல் காட்டி “ஸ்டம்ப்களை அடித்து விடுவேன்” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார். ஆனால் அதற்கும் அசராத டேவிட் வார்னர் பொதுவாக அரை சதம் மற்றும் சதமடித்தால் தம்முடைய பேட்டை போரில் கத்தி சண்டை போடுவது போல் சுழற்றி கொண்டாடும் ஜடேஜாவை போலவே தம்முடைய பேட்டையும் சுழற்றி “அடித்து தான் பாருங்களேன்” என்ற வகையில் சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்தார். அப்படி தம்முடைய ஸ்டைலை தமக்கே காட்டியதால் சிரித்த ஜடேஜாவும் அப்படியே பந்தை அடிக்காமல் திரும்பி சிரித்துக் கொண்டே சென்றார்.

இதையும் படிங்க:வீடியோ : ருதுராஜ் ஹாட்ரிக் சிக்ஸர், ஜடேஜாவின் மாஸ் ஃபினிசிங் – டெல்லியை புரட்டிய சிஎஸ்கே, 11 வருட புதிய சாதனை

அதை பார்த்த பில் சால்ட் மற்றும் வர்ணையாளர்கள் சிரிப்பலையை ஏற்படுத்திய நிலையில் அந்த கலகலப்பான தருணத்தை பார்த்த டெல்லி ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் இது போன்ற கலகலப்பான நிகழ்வுகள் எத்தனையோ நடைபெற்ற போதிலும் இந்த நிகழ்வு ரசிகர்கள் மனதில் எப்போதும் மறக்க முடியாத ஒன்றாக பதிவானது என்றே சொல்லலாம்.

Advertisement