CSK vs DC : ஆரம்பத்திலேயே டெல்லியை முடித்த தோனியின் அனுபவம் – புள்ளிபட்டியலில் சிஎஸ்கே முன்னேற்றம், பிளே ஆஃப் உறுதியானதா?

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சவாலான பிட்ச்சில் ஆரம்பத்திலேயே தடுமாறிய டேவோன் கான்வேவை 10 (13) ரன்களில் அவுட்டாக்கிய அக்சர் படேல் மறுபுறம் 4 பவுண்டரியுடன் அதிரடி காட்டிய ருத்ராஜையும் 24 (18) ரன்களில் காலி செய்தார்.

அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய சென்னைக்கு அடுத்து வந்த மொயின் அலியும் தடுமாற்றமாக 7 (12) ரன்னில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய ரகானேவும் 21 (20) ரன்களில் லலித் யாதவியின் சிறப்பான கேட்ச்சால் நடையை கட்டினார். அதன் காரணமாக 77/4 என திண்டாடிய சென்னைக்கு அடுத்த களமிறங்கிய சிவம் துபே 11 ஓவர்கள் கழித்து முதல் முறையாக அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு 25 (12) ரன்களில் அவுட்டாக அவருடன் மறுபுறம் அசத்திய ராயுடுவும் முக்கிய நேரத்தில் 2 (16) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் 150 ரன்களை தொடுமா என்று கருதப்பட்ட சென்னைக்கு கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா 21 (16) ரன்களும் கேப்டன் தோனி அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 20 (9) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 167/8 ரன்கள் எடுத்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 168 ரன்களை துரத்திய டெல்லிக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் டேவிட் வார்னரை டக் அவுட்டாக்கிய தீபக் சஹர் 3வது ஓவரில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் மறுபுறம் அதிரடி காட்டிய பில் சால்ட்டையும் 17 (11) ரன்களில் அவுட்டாக்கினார்.

போதாக்குறைக்கு அடுத்து வந்த மிட்சேல் மார்ஷ் 5 (4) ரன்களில் மனிஷ் பாண்டேவின் தவறான அழைப்பால் ரன் அவுட்டானார். அதனால் 25/3 என ஆரம்பத்திலேயே சரிந்த டெல்லியை 4வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தாலும் சென்னையின் நேர்த்தியான சுழல் பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாத மனிஷ் பாண்டே 27 (29) ரன்களில் பதிரான வேகத்தில் அவுட்டாகி அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில் மறுபுறம் தடுமாறிய ரிலீ ரோசவ் 35 (37) ரன்கள் எடுத்து ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அதனால் கடைசி 5 ஓவரில் டெல்லிக்கு 70 ரன்கள் தேவைப்பட்ட போது நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் பட்டேல் 2 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக விளையாட முயற்சித்த போது பதிரனா வேகத்தில் 21 (12) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலயே மறுபுறம் தடுமாறிய ரிபல் படேல் 10 (16) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார். இறுதியில் லலித் யாதவ் 12 (5) ரன்களை எடுத்தும் 20 ஓவர்களில் டெல்லியை 140/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளும் தீபக் சஹார் 2 விக்கெட்களும் எடுத்தனர்.

முன்னதாக இப்போட்டியில் பயன்படுத்தப்பட்ட பிட்ச் நேரம் செல்ல செல்ல மெதுவாக மாறும் என்பதை கணித்த கேப்டன் தோனி அதனாலேயே முதலில் பேட்டிங் செய்வதாக டாஸ் வென்ற போது தெரிவித்தார். அவர் சொன்னது போலவே பேட்ஸ்மேன்கள் டெல்லியின் தரமான சுழலில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினாலும் சிவம் துபே, ருதுராஜ் போன்ற முக்கிய வீரர்களின் கணிசமான ரன் குவிப்பால் வெற்றிக்கு போராடும் ஸ்கோரை சென்னை எடுத்தது. ஆனால் பந்து வீச்சில் நீங்களே இப்படி செயல்பட்டால் சொந்த மண்ணில் நாங்கள் எப்படி செயல்படுவோம் என்பது போல் அசத்திய சென்னை பவுலர்கள் டெல்லியை கட்டுப்படுத்தி வெற்றி பெற வைத்தனர்.

இதையும் படிங்க: CSK vs DC : டாஸிலேயே டெல்லியை முடித்த தோனியின் அனுபவம் – புள்ளிபட்டியலில் சிஎஸ்கே முதலிடம், பிளே ஆஃப் உறுதியானதா?

குறிப்பாக வார்னர் – சால்ட் ஆகியோரை தீபக் சஹர் ஆரம்பத்திலேயே அவுட்டாக்கியதும் அக்சர் படேலை கடைசியில் பதிரான அவுட்டாக்கியதும் 7வது வெற்றியை கொடுத்தது. அதனால் புள்ளி பட்டியலில் சென்னை 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் வலுவாக இருப்பதுடன் 92% பிளே ஆப் சுற்றும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மறுபுறம் ஏற்கனவே கடைசி இடத்தில் தவிக்கும் டெல்லி 8வது தோல்வியை பதிவு செய்து ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை 90% இழந்துள்ளது.

Advertisement