சென்னை அணி இதை சமாளிச்சா மட்டும் தான் ஜெயிக்க முடியும் – கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க

CSKvsKKR
- Advertisement -

நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று இரவு 7:30 மணி அளவில் துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே வேளையில் சென்னை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று தமிழக ரசிகர்கள் பெரிதும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

KKRvsCSK

- Advertisement -

ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு அடுத்த ஆண்டு வீரர்களின் மெகா ஏலம் நடைபெற இருப்பதாலும், அடுத்த ஆண்டு முதல் 10 அணிகள் விளையாட இருப்பதாலும் சிஎஸ்கே அணி இந்த தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது 40 வயதை கடந்துள்ள தோனி இந்த தொடரில் நிச்சயம் அவரது தலைமையில் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த முக்கியமான இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டுமெனில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஒரு பெரிய சவாலை சமாளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அந்த சவால் யாதெனில் சென்னை அணி தற்போது பேட்டிங்கில் பெரிதளவு தொடக்க வீரர்களையே சார்ந்துள்ளது என்பது நாம் அறிந்ததே. இந்த தொடர் முழுவதுமே டூபிளெஸ்ஸிஸ் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவருமே 500 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளதால் சென்னை அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது.

ruturaj

அவர்கள் இருவரது விக்கெட்டுகள் விழுந்தால் மிடில் ஆர்டர் சிரமப்படுவதையும் நாம் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அதானால் மிடில் ஆர்டர் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அதையும் தாண்டி இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து அதிரடி ஆட்டம் விளையாட வேண்டிய அவசியம் சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

narine 1

ஏனெனில் கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வருன் சக்ரவர்த்தி மற்றும் ஷாகிப் ஆகிய மூன்று பவுலர்களும் பிளே ஆப் போட்டிகளில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளை வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்தனர். இதன் காரணமாக நிச்சயம் அவர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடினால் தான் மிடில் ஓவர்களில் ரன் வரும். இல்லையெனில் சென்னை அணி 150 ரன்களை கூட அடிக்க முடியாத நிலை ஏற்படும்.

இதையும் படிங்க : இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் – ஆகாஷ் சோப்ரா

எனவே இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement