இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் – ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற லீக் மற்றும் பிளே ஆப் சுற்று போட்டிகளின் முடிவில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. முக்கியமான இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

cskvskkr

- Advertisement -

அதிலும் குறிப்பாக தோனி இன்னும் கோப்பையுடன் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நிச்சயம் இந்த தொடரை வெற்றியுடன் முடிக்க அவர் முயற்சிப்பார் என்று தெரிகிறது. அதேவேளையில் கொல்கத்தா அணியும் பலம் வாய்ந்த பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதால் அவர்களும் கோப்பையை கைப்பற்ற மும்முரம் காட்டுவார்கள். இதன் காரணமாக இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

சென்னை அணியின் பந்துவீச்சை காட்டிலும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் அவர்களை விட தோனி கேப்டன்சியில் அசத்துவார் என்கிற காரணத்தினால் சிஎஸ்கே அணிக்கே கூடுதல் பலம் என்றே கூறலாம். இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற போவது எந்த அணி ? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

csk

என்னை பொறுத்தவரை இந்த இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என கருதுகிறேன். ஏனெனில் தோனி தலைமையிலான சென்னை அணி இந்த ஆண்டு தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எந்த இடத்திலும் ஒரு வீரருக்கு மற்றொரு வீரர் தாங்கி பிடித்து விளையாடுவதால் நிச்சயம் சென்னை அணிக்கு பலம் என்றே கூறுவேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் இறுதிப்போட்டி : சென்னை அணியை எதிர்க்கவுள்ள கொல்கத்தா அணியின் – பிளேயிங் லெவன் இதோ

அதேவேளையில் கொல்கத்தா அணியிலும் சரி, சென்னை அணியிலும் சரி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான தினேஷ் கார்த்திக் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரது பேட்டிங் பார்ம் மோசமாக இருக்கிறது. அவர்கள் இருவரும் 30 ரன்களுக்கு மேல் அடிக்க மாட்டார்கள் எனவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்றும் பட்சத்தில் தோனி இந்த ஆண்டுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement