அடுத்தடுத்த 2 தோல்விகள்.. தற்போதைக்கு சி.எஸ்.கே அணி புள்ளிபட்டியலில் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா? – விவரம் இதோ

CSK
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி துவங்கிய 2024-ஆம் ஆண்டிற்கான நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடப்பு சாம்பியனாக களம் இறங்கியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மீண்டும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றி தோனியை சாம்பியன் வீரராக வழியனுப்ப காத்திருக்கிறது.

- Advertisement -

அதோடு இந்த சீசன் சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்பதனால் நிச்சயம் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த வெற்றியை பெற்ற சி.எஸ்.கே அணியானது கடைசியாக நடைபெற்று முடிந்த டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இதுவரை இரண்டு தோல்விவிகளை பெற்றுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக புள்ளி பட்டியலில் எந்த அளவிற்கு சிஎஸ்கே பின்னடைவை சந்தித்துள்ளது என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். அந்த வகையில் தற்போது வரை சிஎஸ்கே அணி இரண்டு போட்டிகளில் வெற்றி மற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வி என 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படிங்க : 113* ரன்ஸ்.. ராஜஸ்தானின் ஸ்பெஷல் போட்டியில் ராஜாவாக மின்னிய கிங் கோலி.. முதல் வீரராக மாபெரும் ஐபிஎல் சாதனை

இந்த புள்ளி பட்டியலில் கொல்கத்தா முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இவ்விரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் 3 போட்டியிலுமே வெற்றி பெற்றுள்ளனர். அதேபோன்று இந்த தொடரில் தாங்கள் விளையாடிய மூன்று போட்டியிலுமே தோல்வியை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசி இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement