முதல் இடத்திற்கு சென்றது மட்டுமின்றி. பாயிண்ட்ஸ் டேபுளில் பெரிய அட்வான்டேஜ் வைத்திருக்கும் சி.எஸ்.கே – வெளியான புள்ளிப்பட்டியல்

CSK
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி துவக்கத்திலேயே தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கடந்த 9ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் முதல் போட்டியில் விளையாடினர்.

Pant

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பத்தாம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் 188 ரன்கள் அடித்தும் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி முதல் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு சிஎஸ்கே அணி மீண்டு வருமா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பலமாக வீறுகொண்டு எழுந்தது சிஎஸ்கே அணி.

தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு என நான்கு அணிகளையும் அசால்டாக வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. அதனை தொடர்ந்து டெல்லி ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற அந்த அணி முதல் இடத்தையும், சென்னை அணி 2-வது இடத்தையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற சன்ரைஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி அவர்களை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

CSKvsSRH

இந்த வெற்றியின் மூலம் மீண்டும் முதல் இடத்திற்கு சி.எஸ்.கே அணி முன்னேறி உள்ளது. அதன்படி தற்போது இந்த தொடருக்கான புள்ளி பட்டியல் வெளியானது. அதில் சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அதனை தொடர்ந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் யாதெனில் சென்னை அணி நெட் ரன்ரேட்டில் யாரும் அசைக்க முடியாத அளவிற்கு +1.475 என்ற நிலையில் மற்ற அணிகளை காட்டிலும் பெரிய அட்வான்டேஜ் யுடன் உள்ளது.

points table

இரண்டாவது இடத்தில் 5 வெற்றிகளுடன் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் இருந்தாலும் அவர்களது நெட் ரன்ரேட் +0.089 என்ற கணக்கிலேயே உள்ளதால் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணி நெட் ரன்ரேட்டில் பெரிய அட்வான்டேஜ் வைத்துள்ளது பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது.

Advertisement