தல தோனிக்காக 2021 விதிமுறையை தூசி தட்டி கையிலெடுத்த சிஎஸ்கே.. எதிர்க்கும் காவ்யா மாறன்.. வெளியான தகவல்

MS Dhoni CSK 2
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. அந்தத் தொடருக்காக இம்முறை மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு 2 நாட்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தற்போதைய விதிமுறைப்படி அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும்.

அந்த சூழ்நிலையில் ஜூலை 31ஆம் தேதி பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் ஐபிஎல் 2025 வீரர்கள் ஏலத்திற்கான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கை 4க்கு பதிலாக 6 – 7 வரை உயர்த்த வேண்டும் என்று அனைத்து அணிகளும் கோரிக்கை வைத்ததாக தெரிய வந்துள்ளது. அத்துடன் டெல்லி போன்ற சில அணிகள் இம்பேக்ட் வீரர் விதிமுறையை நீக்குமாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

- Advertisement -

சிஎஸ்கே முயற்சி:
அந்தக் கூட்டத்தில் தங்களுடைய ஜாம்பவான் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை தக்க வைப்பதற்காக சிஎஸ்கே பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வருமாறு பிசிசிஐ’யிடம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் 5 வருடங்களை தாண்டி விட்டால் அன்கேப்ட் வீரர்களாக கருதப்படுவார்கள். அதாவது அந்த விதிமுறையின்படி ஓய்வு பெற்ற வீரர்கள் 5 வருடத்தை தாண்டி விட்டால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களாக கருதப்படுவார்கள்.

எனவே அவர்களை 20 லட்சம் என்ற மிகவும் குறைந்த தொகைக்கு தக்க வைக்க முடியும். இந்த விதிமுறை கடந்த 2008 முதல் 2021 வரை நடைமுறையில் இருந்தது. இருப்பினும் 2021ஆம் ஆண்டு அந்த விதிமுறை நீக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த விதிமுறையை மீண்டும் கொண்டு வருமாறு பிசிசிஐயிடம் சிஎஸ்கே நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளதாக ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த விதிமுறையை பயன்படுத்தினால் 12 கோடிக்கு பதிலாக 2019இல் ஓய்வு பெற்ற தோனியை 2025இல் வெறும் 20 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியால் தக்க வைக்க முடியும். எனவே தோனியை தக்க வைப்பதற்காக சிஎஸ்கே நிர்வாகம் அந்தப் பழைய விதிமுறையை தூசி தட்டி கையிலெடுத்துள்ளது. ஆனால் அதற்கு ஹைதராபாத் அணியின் துணை உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்ட எதிரணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: இலங்கை ஒருநாள் தொடரில் ராகுல் – பண்ட் ஆகியோரில் விக்கெட் கீப்பர் யார்? கேப்டன் ரோஹித் பேட்டி

அதனால் மீண்டும் அந்த விதிமுறையை சிஎஸ்கே அணிக்கு சாதகமாக பிசிசிஐ கொண்டு வருவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே 2025 சீசனில் விளையாடுவேன் என்று தோனி நேற்று கூறினார். அதனால் 2025 ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Advertisement