இலங்கை ஒருநாள் தொடரில் ராகுல் – பண்ட் ஆகியோரில் விக்கெட் கீப்பர் யார்? கேப்டன் ரோஹித் பேட்டி

Rohit Sharma 4
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி எளிதாக வென்றது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ஆம் தேதி துவங்குகிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கையை சந்திக்கிறது.

அவரது தலைமையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் போன்ற மேலும் சில நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இணைந்துள்ளனர். எனவே முழுமையான பலத்துடன் களமிறங்கும் இந்தியா டி20 தொடரிலேயே தடுமாறிய இலங்கையை ஒருநாள் தொடரிலும் வீழ்த்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். முன்னதாக இந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கடினமான தேர்வு:
ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் ரிசப் பண்ட் இல்லாத சூழ்நிலையில் கீப்பராக விளையாடிய கேஎல் ராகுல் அபாரமாக பேட்டிங் செய்து இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்து டி20 உலகக் கோப்பையில் அசத்திய ரிசப் பண்ட் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். இந்நிலையில் ரிஷப் பண்ட் – ராகுல் ஆகிய இருவருமே மேட்ச் வின்னர்கள் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பது தமக்கு மிகப்பெரிய சவால் என்று ரோகித் கூறியுள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “அது எடுப்பதற்கு மிகவும் கடினமான முடிவு. இருவருமே தரமான வீரர்கள். அவர்களுடைய திறமை என்ன என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் இருவருமே தங்களுடைய வழியில் மேட்ச் வின்னர்கள்”

- Advertisement -

“அவர்கள் கடந்த காலங்களில் நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளனர். எனவே அது போன்ற தரத்தை கொண்ட வீரர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதல்ல. எப்போதுமே இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் போது இது போன்ற பிரச்சனை இருப்பது நல்லது. அப்போது தான் உங்களுக்கு அணியில் எவ்வளவு தரம் இருக்கிறது என்பது தெரியும்”

இதையும் படிங்க: கெளதம் கம்பீர் ஏன் சிரிப்பதில்லை? அவரோட சேந்து இந்த திட்டத்தை பண்ணப் போறேன்.. கேப்டன் ரோஹித் பேட்டி

“நான் கேப்டனாக இருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். அதனால் விக்கெட் கீப்பராக யார் வாய்ப்பு பெறுவார் என்பதை டாஸ் வீசிய பின்பே தெரிந்து கொள்ள முடியும். இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் இரண்டாம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement