ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த சி.எஸ்.கே – தொடர் சறுக்கலுக்கு இதுவே காரணம் – தவறு இங்கதான் நடக்குது

CSK
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 14-வது ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே அணியானது தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்து இருந்த வேளையில் தற்போது கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு எதிராக 189 ரன்களை குவித்தும் தோல்வி அடைந்த சென்னை அணியானது இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற 53-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 134 ரன்களை மட்டுமே குவித்தது.

cskvspbks

அதன் பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படி தொடர்ந்து மூன்று போட்டிகளில் சி.எஸ்.கே தோல்வியை சந்தித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏனெனில் லீக் சுற்றுகளில் ஆரம்பத்தில் வலுவான அணியாக இருந்த சிஎஸ்கே அணி நிச்சயம் வீழ்த்த முடியாத அணியாக திகழ்ந்தது.

- Advertisement -

அதுமட்டுமின்றி கோப்பையை கைப்பற்றும் அணியாகும் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளிலும் சென்னை அணி தொடர்ந்து தோல்வியடைந்துள்ளதால் பிளேஆப் சுற்றில் எவ்வாறு விளையாடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது யாதெனில் :

ruturaj

சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர்களை தவிர மிடில் ஆர்டரில் யாரும் சரிவர விளையாடுவதில்லை. இந்த காரணம் முற்றிலும் உண்மையே ஏனெனில் புள்ளி விவரத்தின் அடிப்படையில் சென்னை அணியின் துவக்க வீரர்களான டு பிளிசிஸ் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் தான் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் முறையே 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் உள்ளனர்.

- Advertisement -

அவர்கள் இருவரும் இந்த தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளனர். அவர்களை தவிர சொல்லிக்கொள்ளும்படி அளவிற்கு மிடில் ஆர்டரில் யாரும் இதுவரை சிறப்பாக விளையாடவில்லை. ஜடேஜா பின்பகுதியில் இறங்கி நம்பிக்கை கொடுத்தாலும் மிடில் ஆர்டரில் விளையாடி வரும் மொயின் அலி, ராயுடு, ரெய்னா, தோனி போன்ற சீனியர் வீரர்களின் ஆட்டம் தற்போது மோசமாக உள்ளதால் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : இவரை டீம்ல சேத்தத்துக்கு அவரே இருந்திருக்கலாம். தோனியின் முடிவால் – அதிருப்தியில் ரசிகர்கள்

நிச்சயம் மிடில் ஆர்டரில் உள்ள இந்த பேட்டிங் ஆர்டர் குறைபாடுகளை சரி செய்தால் தான் சென்னை அணி கோப்பையை கைப்பற்றும் என்பது உறுதி. இது குறித்து உங்களது கருத்து என்ன ?

Advertisement