ரச்சின் காயத்துக்கு பாகிஸ்தானின் அவசரமே காரணம்.. லதீப் விமர்சனம்.. துபாய்க்கு மாற்ற ரசிகர்கள் கோரிக்கை

Rashid Latif
- Advertisement -

பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 8ஆம் தேதி துவங்கியது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 78 ரன்கள் வித்தியசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. நேற்று லாகூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 330-6 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 106* ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 47.5 ஓவரில் 252 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஃபகார் ஜமான் 84 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 3, மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

ரச்சின் காயம்:

அதனால் நியூசிலாந்து 2 புள்ளிகளைப் பற்றி இந்தத் தொடரை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் 38வது ஓவரில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அடித்த ஃபிளாட்டான கேட்ச்சை இளம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா பிடிக்க முயற்சித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக கைநழுவிய பந்து அவருடைய முகத்தில் பட்டு காயத்தை உண்டாக்கியது.

உடனே அவரது முகத்தில் இருந்து ரத்தம் வந்ததால் மேற்கொண்டு விளையாட முடியாத ரவீந்திரா பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்காக லாகூர் உட்பட பாகிஸ்தானில் உள்ள மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டன. அப்போது ராட்சத மின்விளக்குகள் சரியாக அமைக்கப்படாததே ரச்சின் ரவீந்திராவின் பார்வையில் தொந்தரவை ஏற்படுத்தி காயத்தை உண்டாக்கியதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரசித் லத்தீப் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

துபாய்க்கு மாத்துங்க:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற விளக்குகளில் வெளிச்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் பந்து கிடைமட்டமாக வரும் போது உங்களால் அதை தெளிவாக பார்க்க முடியாது” என்று கூறினார். அதே போல லாகூர் மைதானத்தில் பயன்படுத்தப்பட்ட மின்விளக்குகள் சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட தரமற்ற பொருட்கள் என்று ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கிறார்கள்.

இதையும் படிங்க: 76 ரன்ஸ்.. போல்ட் மிரட்டல்.. காவ்யா அணியின் ஹாட்ரிக் கனவை தூளாக்கிய எம்ஐ.. 11வது கோப்பை வென்று சாதனை

அதனாலேயே அது சீரான வெளிச்சத்தைக் கொடுக்கவில்லை என்றும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே 115 நாட்களில் மைதானத்தைப் புதிதாக புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் பாகிஸ்தான் வாரியத்தின் அவசர செயல்பாடே ரச்சின் ரவீந்திரா காயத்தை சந்திக்க காரணம் என்று ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபியை துபாய்க்கு மொத்தமாக நகர்த்த வேண்டும் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement