ஆஃப்ரிடியை சரமாரியா வெளுத்து வாங்கிய சுரேஷ் ரெய்னா…காரணம் இதுதான் ?

Raina
- Advertisement -

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக சர்ச்சைக்குரிய டிவீட் செய்த அப்ரிடிக்கு ஏற்கனவே கம்பீர் மற்றும் கோலி பதிலடி கொடுக்க தற்போது ரெய்னா டிவிட்டரில் அப்ரிடியுடன் மல்லுக்கு நின்றுள்ளார்.காஷ்மீர் யாருக்கும் சொந்தம் என்கிற பிரச்சனை கடந்த ஐம்பதாண்டுகளை தாண்டியும் இன்னும் முடிந்தபாடில்லை. இந்திய மற்றும் பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காஷ்மீர் பகுதிக்கு இரண்டு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.

- Advertisement -

இதில் ஒரு பகுதியை ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றது.இந்நிலையில் காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இருந்தபோதிலும் பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் சில தீவிரவாத அமைப்புகள் அடிக்கடி காஷ்மீரில் அத்துமீறி நுழைவதுடன் தாக்குதலும் நடத்தி வருகின்றது. இவர்களுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி தந்துவருகின்றது.

இந்நிலையில் காஷ்மீர் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் அப்ரிடி “இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளில் வேண்டாத்தகாக சம்பவங்கள் பல நடந்து வருகின்றன. தங்களின் விடுதலைக்காக போராடும் அப்பாவி போராளிகளின் உயிரை இந்திய அரசாங்கத்தின் துப்பாக்கி குண்டுகள் பறித்து வருகின்றன. இது ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல. அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஐக்கிய நாடுகள் சபை அமைதியாக இருப்பது அதிர்ச்சியுடன் கூடிய வேதனையை அளிக்கின்றது” என்றுள்ளார்.

இந்த டிவிட்டர் பதிவுக்கு தக்க பதிலடி அளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ்ரெய்னா டிவிட்டரில் “காஷ்மீர் எங்கள் பூமி. அது எங்கள் முன்னோர்கள் பிறந்து வாழ்ந்த மண். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கமே. எங்கள் காஷ்மீரில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நடத்திடும் தாக்குதலையும், ராணுவம் நடத்தி வரும் அத்துமீறல்களையும் நிறுத்த சொல்லி அப்ரிடி கேட்டுக்கொள்வார் என நம்புகிறேன். எங்களுக்கு தேவை அமைதி மட்டுமே, வன்முறை அல்ல” என்று எழுதியுள்ளார்.ஏற்கனவே அப்ரிடியின் இந்த சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவு குறித்து கம்பீரும், கோலியும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

Advertisement