திடீரென ஓய்வு பெற்ற இயான் மோர்கனுக்கு ஆதரவாக இணையத்தில் ட்ரென்டாகும் ஹாஷ் டேக் – ரசிகர்கள் நெகிழ்ச்சி

Morgan
- Advertisement -

அயர்லாந்து நாட்டை பூர்வீகமாக கொண்டு அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இயான் மோர்கன் பின்னர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்து இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். கடந்த 2006-வது ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இயான் மோர்கன் 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அவரது தலைமையில் மிகச்சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டது.

Morgan

- Advertisement -

அதாவது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து 50 ஓவர் சாம்பியன் பட்டத்தையும் முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இப்படி இங்கிலாந்து அணியின் உலக கோப்பைக்கு வித்திட்ட முதல் கேப்டனாக ரசிகர்களால் வாழ்த்தப்பட்ட இயான் மோர்கன் இன்று திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

35 வயதாகும் இயான் மோர்கன் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 126 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 76 வெற்றிகளை பெற்று தந்துள்ளார். வெற்றிகரமான இங்கிலாந்து அணியின் கேப்டனாக பார்க்கப்படும் இவர் ஒட்டுமொத்தமாக 248 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7701 ரன்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2458 ரன்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 35 வயதான அவர் இன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தான் ஏன் ஓய்வு பெற்றேன் என்பதை குறித்து சிலகருத்துக்களை பகிர்ந்த இயான் மோர்கன் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களாகவே உடற்தகுதி மற்றும் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் இருந்தன.

- Advertisement -

அதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற செய்திகள் வெளியான வேளையில் இன்று அவர் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளார். இருப்பினும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை வரை விளையாடுவார் என்று எதிர்பார்த்த வேளையில் அவர் திடீரென ஓய்வு அறிவித்தது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG : போன டைம் செய்த தவறை இப்போது செய்யாமல் தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுங்க – ஸ்வான் கருத்து

இந்நிலையில் இயான் மோர்கனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தற்போது ரசிகர்கள் ட்விட்டரில் #ThankYouEoinMorgan என்ற ஹாஷ் டேக்கை ட்ரென்ட் ஆக்கி வருகின்றனர். இயான் மோர்கன் பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் கமென்ட் செக்ஷனில் பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement