IND vs ENG : போன டைம் செய்த தவறை இப்போது செய்யாமல் தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுங்க – ஸ்வான் கருத்து

Ashwin
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் 5-வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை கடந்த வருடம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொண்ட விராட் கோலி தலைமையிலான 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என முன்னிலை பெற்ற போது அத்தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே தற்போது நடக்கும் கடைசி போட்டியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா ஏற்கனவே விராட் கோலி பெற்றுக் கொடுத்த வெற்றியை பினிஷிங் செய்து இங்கிலாந்து மண்ணில் 15 வருடங்களுக்கு பின் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

indvseng

- Advertisement -

ஆனால் இம்முறை புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவான அணியாக மாறியுள்ள இங்கிலாந்து இந்தியாவுக்கு கடும் சவாலாகியுள்ளது. மேலும் இப்போட்டிக்கு தயாராகும் வகையில் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக நடந்த பயிற்சி போட்டியின்போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா ஏற்பட்டதால் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அதனால் இப்போட்டியில் இந்தியாவை வழிநடத்த போவது யார் என்ற மிகப்பெரிய குழப்பம் எழுந்துள்ளது.

ஸ்பின்னர் யார்:
பொதுவாகவே இங்கிலாந்து நாட்டில் வேகப்பந்து அதிகமாக எடுபடும் என்பதால் 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளர் மட்டுமே பெரும்பாலும் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்திய அணியில் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களாக இருக்கும் ரவிச்சந்திரன் – அஸ்வின் ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் இப்போட்டியில் விளையாடப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜா நன்கு பேட்டிங் செய்ய கூடியவர் என்பதால் கடந்த வருடம் நடந்த முதல் 4 போட்டிகளில் அஷ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

Ashwin-Jadeja

ஆனால் அப்போதிருந்த கேப்டன் விராட் கோலி சுழல் பந்து வீச்சுக்கு கை கொடுக்காத வெளிநாடுகளில் அஷ்வின் சரிப்பட்டு வரமாட்டார் என்ற கோணத்தில் பல முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்ட போதிலும் கடைசி வரை வாய்ப்பு கொடுக்கவில்லை. இத்தனைக்கும் அந்தத் தொடருக்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிராக இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறிய நிலையில் 2 இன்னிங்சிலும் நியூசிலாந்தின் முதல் விக்கெட்டை அஸ்வின் தான் எடுத்திருந்தார்.

- Advertisement -

தப்பு பண்ணாதீங்க:
மேலும் ஆரம்ப காலங்களை காட்டிலும் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ள அவர் வெளிநாடுகளிலும் சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளார் என்பதால் புதிய கேப்டன் ரோகித் மற்றும் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரின் திறமைக்கும் அனுபவத்துக்கும் மதிப்பளித்து வாய்ப்பு கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் பர்மிங்காம் கால சூழ்நிலைகள் அஸ்வினுக்கு மிகவும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான் கடந்த வருடம் செய்த தவறை போல இம்முறையும் செய்யாமல் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Swann

“இப்போட்டி எட்ஜ்பஸ்டனில் நடப்பதால் இதற்கு முன்பு அங்கு விளையாடிவர்களை நான் பரிந்துரைப்பேன். இதற்கு முன் அங்கு அஸ்வின் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரைப்போன்ற பவுலர்களுக்கு அந்த மைதானம் கச்சிதமாக பொருந்தும். சொல்லப்போனால் கடைசியாக 2018இல் அலெஸ்டர் குக் போன்றவரை 13, 0 என 2 இன்னிங்சிலும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாக்கியுள்ளார். நானாக இருந்தால் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளிலும் அஸ்வினை தேர்வு செய்வேன். அவரால் சிறப்பாக பந்து வீச முடிவது மட்டுமல்லாமல் பேட்டிங்கும் செய்ய முடியும். எனவே அவர் எப்போதும் 11 பேர் அணியில் இருக்க வேண்டும்”

- Advertisement -

“அவர் சுழல் பந்து வீச்சின் பேராசிரியர். சில சமயங்களில் அவர் அதிகப்படியாக சிந்தித்தாலும் எட்ஜ்பஸ்டன் டெஸ்டில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பார். இப்போது நல்ல வெயிலான சூழல் நிலவுவதால் 2-வது இன்னிங்சில் அவர் அதிக ஓவர்களை வீசினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சில சமயங்களில் இந்தியாவை போன்ற வெளிநாட்டு அணிகள் தப்புக்கணக்கு போட்டு இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வேலையை கொடுக்கின்றன”

Ashwin 1

“ஹெண்டிங்க்லே நகரில் ஜேக் லீச் 10 விக்கெட்டுகளை எடுக்க முடிந்தால் நிச்சயம் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் எட்ஜ்பஸ்டனில் மகிழ்ச்சியுடன் பந்து வீசுவார்கள். அஸ்வினை இந்தியா விளையாடாமல் போனால் அது வேடிக்கையாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : கேகேஆர் உரிமையாளர் ஷாருக்கான் அழைத்தும் கோச் வாய்ப்பை நிராகரித்த தரமான இந்திய பயிற்சியாளர்

நேற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் 2 இன்னிங்சிலும் குறைவான அனுபவம் கொண்ட இங்கிலாந்தின் ஜேக் லீச் தலா 5 விக்கெடுகளை எடுக்க முடியுமானால் நிச்சயம் பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் அவரை விட அனுபவத்தில் சிறந்த அஷ்வினால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறும் கிரேம் ஸ்வான் அவருக்கு நிச்சயம் இந்தியா வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement