கேகேஆர் உரிமையாளர் ஷாருக்கான் அழைத்தும் கோச் வாய்ப்பை நிராகரித்த தரமான இந்திய பயிற்சியாளர்

Sharukh-khan
- Advertisement -

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இந்த வருடம் 2 பாகங்களாக நடைபெற்ற இந்த தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து ஜூன் 22இல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் 41 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சாதனை படைத்துள்ள வலுவான மும்பையை ஒரு கோப்பையை கூட வெல்லாத மத்தியபிரதேசம் எதிர்கொண்டது.

Ranji Trophy MP

- Advertisement -

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் அற்புதமாக செயல்பட்ட மத்திய பிரதேசம் மும்பைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்றில் தங்களது முதல் ரஞ்சிக் கோப்பையை முத்தமிட்டு சரித்திரம் படைத்தது. அந்த போட்டி முடிந்ததும் கலங்கிய கண்களுடன் ஓடி வந்த மத்திய பிரதேசத்தின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் தனது அணி வீரர்களை கட்டி அணைத்து கொண்டதும் அவரை அந்த அணி வீரர்கள் தோளில் சுமந்ததும் பார்த்த ரசிகர்களின் நெஞ்சை தொட்டது.

கடந்த 1999 ரஞ்சி கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட அவரது தலைமையில் வரலாற்றில் முதலும் கடைசியுமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மத்திய பிரதேசம் இதே பெங்களூரு மைதானத்தில் கர்நாடகத்திடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. ஆனால் தனது மாநிலத்துக்காக ரஞ்சிக் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற வைராக்கியத்துடன் இருந்த அவர் 23 வருடங்கள் கழித்து ஒரு பயிற்சியாளராக தற்போது ரஞ்சிக் கோப்பையை முத்தமிட்டது பல முன்னாள் வீரர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

Chandrakant Pandit

தரமான கோச்:
இவரை தற்காலத்தை சேர்ந்த நிறைய ரசிகர்கள் அறிந்திருக்க முடியாது. இந்தியாவுக்காக 1986 முதல் 1992 வரை 5 டெஸ்ட் மற்றும் 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் ஒரு வீரராக நிறைய மனமுடையும் தோல்விகளை சந்தித்துள்ளார். அதில் கடந்த கடந்த 1986இல் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 39* ரன்களை எடுத்து வெற்றிக்காக இவர் போராடிய போதிலும் அப்போட்டி டையில் முடிந்தது அந்த காலத்து ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

அதேபோல் கபில்தேவ் தலைமையிலான ஹரியானா அணிக்கு எதிரான ஒரு ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் இவரது அணி தோற்றத்தையும் மறக்க முடியாது. அதைவிட 1999 ரஞ்சி கோப்பையில் கேப்டனாக கர்நாடகத்திடம் தோல்வியடைந்த அவர் அதோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் திறமை என்றுமே வீணாகாது என்பதுபோல் பயிற்சியாளராக அவதாரம் எடுத்த இவர் 2003, 2004 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியை பயிற்சியாளராக வழி நடத்தி சாதனை படைத்தார்.

Ranji Trophy Chandrakant Pandit And Aditya Srivastava

செய்யாத ஐபிஎல் வேலை:
அதன்பின் 2016இல் மீண்டும் மும்பைக்காக பயிற்சியாளராக ரஞ்சிக் கோப்பையை வென்ற இவரை 2017/18 சீசனில் விதர்பா அணி நிர்வாகம் தங்களது பயிற்சியாளராக நியமித்தது. அந்த முதல் வருடத்திலேயே அவரது தலைமையில் முதல் ரஞ்சிக் கோப்பையை முத்தமிட்ட விதர்பா 2018/19 சீசனிலும் 2-வது கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

அப்படி வெளிமாநிலங்களுக்கு ரஞ்சிக் கோப்பையை வென்று கொடுக்க முடிந்த தம்மால் ஏன் சொந்த மாநிலத்திற்கு வாங்கித் தரமுடியாது என்று முடிவெடுத்த அவர் விதர்பா அணியிலிருந்து விலகி இந்த வருடம் மத்திய பிரதேசத்தின் பயிற்சியாளராக செயல்பட்டு எடுத்த காரியத்தில் வெற்றியும் கண்டுள்ளார். ரஞ்சி கோப்பையின் சர் அலெஸ் பெர்குசன் என்று போற்றும் அளவுக்கு தரமான பயிற்சியாளராக கருதப்படும் இவர் ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட பயிற்சியாளராக செயல்பட்டு யாரும் பார்த்திருக்க முடியாது.

sharukh 1

இருப்பினும் கடந்த 2012 ஐபிஎல் தொடரில் தங்களது அணிக்காக பயிற்சியாளராக செயல்படுமாறு கொல்கத்தா அணி நிர்வாக உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இவரை அழைத்தார். ஆனால் அந்த சமயத்தில் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரின் கீழ் துணை பயிற்சியாளராக செயல்படும் வேலை மட்டுமே கிடைத்ததால் அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாக சந்திரகாந்த் பண்டிட் பெருமையுடன் தெரிவிக்கிறார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் அணிகளுக்கு நான் போன் செய்தால் நிச்சயம் எனக்கு ஏதேனும் ஒரு வேலை கிடைக்கும். ஆனால் அது என்னுடைய ஸ்டைல் கிடையாது. மிஸ்டர் சாருக்கானை நீண்ட நாட்களுக்கு முன் (2012இல்) சந்தித்தேன். ஆனால் வெளிநாட்டு பயிற்சியாளருக்கு கீழ் என்னால் வேலை செய்ய முடியாது என்பதால் அதை மறுத்து விட்டேன். ஒவ்வொரு ரஞ்சி கோப்பையும் எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது. ஆனால் இது மிகவும் ஸ்பெஷலானது.

இதையும் படிங்க : IND vs IRE : 2 ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு – அணியில் 3 மாற்றங்கள்

ஏனெனில் மத்திய பிரதேசத்தின் கேப்டனாக 23 வருடங்களுக்கு முன்பு முடியாததை இப்போது செய்துள்ளேன். இந்த அனைத்து வருடங்களிலும் என்னிடம் ஏதோ திறமை இன்னும் இருப்பதாக உணர்கிறேன். அதனாலேயே தற்போது அதை உணர்ச்சிபூர்வமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

Advertisement