அஸ்வினுக்கு ஆஸ்திரேலியாவில் வரவேற்பு.. விராட், ரோஹித்துக்கும் உருவாகும் வாய்ப்பு.. ஆஸி நிர்வாகி பேட்டி

Ashwin AUS
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட உள்ளதாக தெரிவித்தார். அதற்காக துபாயில் நடைபெறும் ஐஎல் டி20 போன்ற தொடர்களில் தம்முடைய பெயரை விண்ணப்பித்துள்ளதாகவும் அஸ்வின் கூறியிருந்தார்.

2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய கோப்பைகளை இந்தியா வெல்ல உதவிய அவர் 2010, 2011 ஆகிய அடுத்தடுத்த ஐபிஎல் கோப்பைகளை சிஎஸ்கே வெல்ல உதவினார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள அஸ்வின் நிறைய சாதனைகளையும் படைத்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் தங்களுடைய நாட்டில் நடைபெறும் பிக்பேஸ் தொடரில் வந்து விளையாடலாம் என்று ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அஸ்வினுக்கு ஆஸியில் அழைப்பு:

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் வந்து விளையாடுமாறு அந்நாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டோட் க்ரீன்பெர்க் அழைப்பு விடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் போன்ற நல்ல சான்றிதழ்களைக் கொண்டுள்ள வீரர் இங்கே வந்து பிபிஎல் தொடரில் விளையாடுவது பல வகைகளில் சிறந்ததாக இருக்கும்”

“சாம்பியன் பிளேயரான அஸ்வின் எங்களுடைய கோடை கால கிரிக்கெட்டில் பிக்பேஷ் தொடருக்காக நிறைய கொண்டு வருவார்” என்று கூறினார். அத்துடன் பிபிஎல் தொடரில் வந்து விளையாடுமாறு அஸ்வினை தனிப்பட்ட முறையில் அணுகி அவர் கேட்டுக் கொண்டதாகவும் கிரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விராட், ரோஹித்:

ஆஸ்திரேலியாவின் இந்த அழைப்பை ஏற்று அஸ்வின் பிபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் உலகின் மற்ற தொடர்களைக் காட்டிலும் பிபிஎல் தொடர் நல்ல தரமானதாக அறியப்படுகிறது. எனவே அவர்களுடைய அழைப்பை ஏற்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் விளையாடும் முதல் இந்திய நட்சத்திர வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார்.

இதையும் படிங்க: ஆஷஸ் பட் கமின்ஸை பாத்து.. பும்ரா கத்துக்கிட்டு இந்தியாவுக்காக இதை செய்யனும்.. பதான் விமர்சனம்

இதற்கிடையே விராட், ரோஹித் ஆகியோரும் இன்னும் சில வருடங்களில் முழுமையாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற உள்ளார்கள். அதனால் அவர்களைப் போன்ற நட்சத்திர வீரர்களும் வருங்காலங்களில் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகும். அதற்கான அடித்தளம் ஆஸ்திரேலிய மண்ணில் அஸ்வின் விளையாடுவதால் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement