நாங்க தயார்! இந்தியா – பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கும் ஆஸ்திரேலியா, எதற்கு தெரியுமா?

indvsaus
- Advertisement -

ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. இதில் கடந்த வருடம் முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டு நடப்பு சாம்பியனாக விளங்கும் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. அந்த அணியுடன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் டாப் 16 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

T20

- Advertisement -

இந்த உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் 2-வது பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது முதல் லீக் போட்டியில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலக புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளன. இந்த போட்டிக்காக டிக்கெட் விற்பனை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. அந்த அளவுக்கு இந்தப் போட்டிக்காக ஒட்டுமொத்த உலகமே மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான்:
ஏனெனில் ஆசியாவின் டாப் 2 அணிகளான இவ்விரு அணிகளும் கடந்த பல வருடங்களாக எல்லை பிரச்சனை காரணமாக நேருக்கு நேர் கிரிக்கெட் போட்டிகளில் மோதுவதில்லை. மாறாக ஐசிசி நடத்தும் இது போன்ற உலக கோப்பைகளில் மட்டும் வருடத்திற்கு ஒருமுறை மோதி வருகின்றன. எனவே இவ்விரு அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பைவிட மவுசு கூடி உள்ளதால் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

INDvsPAK

எல்லை பிரச்சனை காரணமாக ஐசிசி உலகக்கோப்பைகளை தவிர ஆசிய கோப்பையில் விளையாடும் நிலைமை வந்தால் கூட இந்த 2 நாடுகளும் உங்கள் நாட்டுக்கு நான் வரமாட்டேன், எங்கள் நாட்டுக்கு நீ வர வேண்டாம் என்பதுபோல் சண்டையிட்டுக் கொள்கின்றன. அதாவது இப்போதெல்லாம் இந்த 2 அணிகளும் ஒரு கிரிக்கெட் போட்டியில் மோத வேண்டும் என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறாமல் பொதுவான இடத்தில் நடை பெற்றால் மட்டுமே சாத்தியம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அழைப்பு விடுக்கும் ஆஸ்திரேலியா:
அப்படிப்பட்ட இந்த நிலையில் எவ்வித பிரச்சினையுமின்றி ஒரு பொது இடமான எங்கள் நாட்டில் வந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுங்கள் என்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதுபற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை இயக்குனர் நிக் ஹோக்லி கூறியது பின்வருமாறு. “எனக்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவதில் மிகுந்த விருப்பமாக உள்ளது.

INDvsAUS

இதற்கு முந்தைய காலகட்டங்களில் கூட அது மிகச் சிறப்பான வெற்றியை கொடுத்தது. எனவே அது போன்ற ஒரு தொடரை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆஸ்திரேலிய மண்ணில் வசிக்கிறார்கள். அந்த 2 அணிகள் மோதுவதை பார்க்க ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது. எனவே அதுபோன்ற ஒரு போட்டிகளை நடத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமேயானால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதற்கான வேலைகளை செய்து தருவோம்” என கூறினார்.

- Advertisement -

அதாவது ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு நாங்கள் தயார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த நிறைய மக்கள் வசிப்பதால் அதுபோன்ற ஒரு முத்தரப்பு தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் நடத்தினால் நிச்சயமாக ரசிகர்களின் பெரிய ஆதரவு இருக்கும் என நிக் ஹோக்லி கூறியுள்ளார்.

INDvsPAK

அவர் கூறுவது போல கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் மோதிய முத்தரப்பு தொடர்கள் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றது. குறிப்பாக கடந்த 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய 3 அணிகள் மோதிய முத்தரப்பு காமன்வெல்த் பேங்க் கிரிக்கெட் தொடரை எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய வென்று சாதனை படைத்தது யாராலும் மறுக்க முடியாது.

- Advertisement -

சாத்தியமா:
ஆனால் சமீப காலங்களாக அதுபோன்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது. மேலும் இந்தியா-பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆகிய உலகின் டாப் 4 அணிகள் விளையாடும் வகையில் ஒரு புதிய நாற்தரப்பு தொடரை நடத்த ஐசிசியிடம் அனுமதி கேட்க உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ரமீஸ் ராஜா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : இந்த ஆண்டிற்கான பெங்களூரு அணியின் கேப்டன் யார்? – விராட் கோலி கொடுத்த முக்கிய அப்டேட்

இப்படி இந்தியா – பாகிஸ்தான் தொடர்களை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் போன்ற வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றன. ஆனால் அந்தத் தொடரை நடத்துவதில் இதுவரை இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த ஒரு ஆர்வமும் காட்டாமல் இருந்து வருகிறது. ஒருவேளை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இந்த விஷயத்தில் தலையிட்டு அது போன்ற ஒரு முத்தரப்பு தொடரில் இந்தியா விளையாடுவதற்கு ஏற்பாடு செய்தால் கண்டிப்பாக இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement