ஆஸ்திரேலியா கிட்ட விட்டத இந்தியா கிட்ட புடிக்க போறோம் – சவால் விட்ட நியூசி பயிற்சியாளர்

Mcmillan
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றடைந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் வரும் 24-ம் தேதி நாளை மறுதினம் துவங்க இருக்கிறது.

ind vs nz

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிரேக் மேக்மில்லன் இந்த தொடர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் : கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது. அதன் பிறகு தற்போது சந்திக்க இருக்கும் இந்திய தொடர் மிகப்பெரியது.

தற்போதுள்ள இந்திய அணி மிகவும் பலம் மிக்க அணியாக திகழ்கிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என இந்திய அணி எல்லா வகை கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இந்த தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் அதேபோன்று நியூசிலாந்து கடந்த தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலாக இந்த இந்திய தொடரில் இரண்டு தொடரையாவது கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

ind vs nz 1

இந்திய அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடும் நியூசிலாந்து அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக சந்திக்க இருக்கும் மிகப்பெரிய டி20 தொடர் என்பதால் இந்த தொடரில் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்திய அணி இப்போது இருக்கும் பலத்தினால் நிச்சயம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement