இந்தியாவை தீபாவளியன்று நெதர்லாந்தால் தோற்கடிக்க முடியுமா.. இந்திய வம்சாவளி வீரர் கொடுத்த சாத்தியமான பதில்

Taja Nidamanru
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா அழுத்தமான நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக தங்களுடைய கடைசி லீக் போட்டியில் கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்தை வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று எதிர்கொள்கிறது.

மறுபுறம் 2011க்குப்பின் கடுமையாக போராடி இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து வலுவான தென்னாப்பிரிக்காவை அசால்டாக தோற்கடித்து வங்கதேசத்தையும் வீழ்த்தியது. அது போக நிறைய போட்டிகளில் பல்வேறு தருணங்களில் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி இந்திய ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் அளவுக்கு நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து போன்ற சில அணிகளை காட்டிலும் நன்றாகவே விளையாடியது என்றே சொல்லலாம்.

- Advertisement -

வேடிக்கையான விளையாட்டு:
இருப்பினும் 8 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்துள்ளதால் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ள அந்த அணி கடைசியாக இந்தியாவை பெங்களூருவில் வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷமி, பும்ரா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்ட இந்தியாவுக்கு எதிராக வெற்றியை பெறுவதற்காக நெதர்லாந்து போராட உள்ளது.

ஆனாலும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவை போன்ற அணிகளையே வீழ்த்திய இந்தியா நிச்சயமாக நெதர்லாந்தையும் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கணிக்க முடியாத வேடிக்கையான கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடிப்பது உட்பட எது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்று நெதர்லாந்துக்காக விளையாடும் இந்திய வம்சாவளி பெற தேஜா நிதமன்ரு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி இந்தியாவை தோற்கடிக்க போராடுவோம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது கிரிக்கெட் அல்லவா? எனவே இந்தியாவை நாங்கள் தோற்கடிப்பதும் சாத்தியமாகலாம். நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடுகிறோம். நாங்கள் செய்வதை நன்றாக செய்கிறோம். குறிப்பாக பந்து வீச்சில் அசத்தும் சில வீரர்கள் எங்களிடம் இருக்கின்றனர்”

இதையும் படிங்க: செமி ஃபைனலில் இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் வரனும்.. காரணம் அது தான்.. சௌரவ் கங்குலி ஓப்பன்டாக்

“அதே போல தரமான சுழலை எதிர்கொள்ளும் சில பேட்ஸ்மேன்களும் எங்களிடம் உள்ளனர். எனவே எங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் மட்டுமே தேவை. அதே சமயம் இந்தியா மிகவும் வலுவான அணியாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் விளையாட்டில் வேடிக்கையான விஷயங்கள் நடைபெற்றுள்ளன. அதில் சிறப்பாக விளையாடும் அணியே வெற்றி பெறும் என்பதால் இது எங்களுக்கு மற்றுமொரு நல்ல வாய்ப்பாகும். எந்த போட்டியையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவை எதிர்கொள்ள காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement