கஷ்டமா தான் இருக்கு ஆனா இளம் வீரர்கள் வந்து விட்டதால் அவரோட கேரியர் முடிஞ்சுடிச்சு – நிதர்சனத்தை பேசிய டிகே

DInesh Karthik Ishan Kishan
- Advertisement -

2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் அதிரடியாக செயல்பட்டு ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றியை சுவைத்தது. சட்டக்கிரோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 290 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இஷான் கிசான் இரட்டை சதமடித்து 210 (131) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 113 (91) ரன்களும் குவித்த அதிரடியில் 50 ஓவரில் 409/8 ரன்கள் குவித்தது.

Ishan Kishan Vs BAN

- Advertisement -

அதை தொடர்ந்து 410 ரன்களை துரத்திய வங்கதேசம் இம்முறை பொறுப்புடன் செயல்பட்ட இந்திய பவுலர்களிடம் ஆரம்ப முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 34 ஓவர்களில் 182 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. முன்னதாக இப்போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற இஷான் கிசான் அதை பொன்னாக மாற்றி ஏராளமான உலக சாதனைகளை படைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

கேரியர் முடிஞ்ச்சு:

மறுபுறம் அவருடன் ஓப்பனிங் ஜோடியாக களமிறங்கிய சீனியர் சிகர் தவான் இத்தொடரில் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் சொதப்பிய நிலையில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்த சட்டகிரோம் மைதானத்திலும் வெறும் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். ஒரு காலத்தில் ரோகித் சர்மாவின் நிரந்தர தொடக்க வீரராக அதிரடியாக விளையாடி உலக கோப்பை போன்ற அழுத்தம் வாய்ந்த பெரிய தொடர்களில் அபாரமாக செயல்பட்டு மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் 36 வயதை கடந்து விட்ட காரணத்தால் சமீப காலங்களாகவே இப்படி சொதப்பலாக செயல்பட்டு வருகிறார்.

Dhawan

இதனால் காலம் கடந்த அவர் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதாக தெரிவிக்கும் ரசிகர்கள் இஷான் கிசான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் போன்ற அடுத்த தலைமுறை இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள். இந்நிலையில் இத்தொடரில் சுமாராக செயல்பட்ட சிகர் தவான் அடுத்ததாக வரும் ஜனவரி மாதம் நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் அதனால் அவருடைய கேரியர் முடிந்து விட்டதாக ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இஷான் கிசான் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் வந்து விட்டார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இலங்கை ஒருநாள் தொடரில் தவான் எந்த இடத்தில் விளையாடுவார்? ஏனெனில் தற்போது இரட்டை சதமடித்துள்ள இசான் கிசானை தேர்வு குழுவினர் எப்படி ஒதுக்க முடியும். மறுபுறம் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அந்த தொடரில் ரோஹித் சர்மா வரும் போது யாரேனும் ஒருவர் வெளியே சென்றாக வேண்டும். அந்த இடத்தில் ஷிகர் தவான் தான் இருப்பார்”

Dinesh-Karthik-1

“அதனால் அவருடைய அற்புதமான கேரியர் சோகத்துடன் நிறைவு பெறலாம். மேலும் புதிதாக பொறுப்பேற்கும் தேர்வுக்குழு சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் சுப்மன் கில் இடம் பிடித்திருந்தால் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் நிச்சயம் அவர் ஓப்பனிங் வீரராக களமிறங்கி இருப்பார். மறுபுறம் இசான் கிசான் தமக்கு கிடைத்த வாய்ப்பை இருகரம் கொண்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டார்”

இதையும் படிங்க: இவரு பாராட்டுறாரா? இல்ல கிண்டல் பண்றாரா? இந்திய அணியின் பேட்டிங் குறித்து – மைக்கல் வாகன் போட்ட பதிவு

“இதனால் தவானுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதை விட கடைசி வரை பேட்டிங் செய்திருந்தால் 300 ரன்கள் அடித்திருப்பேன் என்று தைரியமாக தன்னம்பிக்கையுடன் பேசும் ஒருவர் இந்திய அணிக்குள் வருவது வரவேற்கத்தக்கது. அவரிடம் வெற்றிக்கான பசி உள்ளது. மேலும் அவர் விக்கெட் கீப்பர்கள் இருக்கும் இடத்தில் போட்டிக்கு வந்துள்ளார். அவர் தேர்வுக் குழுவினரின் கதவைத் தட்டி என்னையும் பாருங்கள் என்ற வகையில் செயல்பட்டு உள்ளார்” என்று கூறினார்.

Advertisement