இது பகல் கொள்ளையா இருக்கே.. ஆஸிக்கு சாதகமாகி இங்கிலாந்துக்கு ஆப்பான டிஆர்எஸ்.. ரசிகர்கள் விளாசல்

- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 2 போட்டிகளின் முடிவில் 2 – 0* (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கும் அத்தொடரின் 3வது போட்டி டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 371 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி சதமடித்து 106, உஸ்மான் கவாஜா 82, மிட்சேல் ஸ்டார்க் 54 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக அப்போட்டியில் அலெக்ஸ் கேரி 72 ரன்களில் இருந்த போது ஜோஸ் டாங் வீசிய 63வது ஓவரின் முதல் பந்தில் எட்ஜ் கொடுத்தார்.

- Advertisement -

ஆஸிக்கு சாதகம்:

அதை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் கச்சிதமாக பிடித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியினர் அவுட் கேட்டார்கள். அதற்கு களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்காததைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி ரிவ்யூ செய்தது. அதை 3வது நடுவர் சோதிக்கையில் கேரியன் பேட்டை பந்து கடந்து செல்லும் போது ஸ்னிக்கோ மீட்டரில் ஸ்பைக் தெரிந்தும் இடைவெளி இருந்ததால் அவுட் வழங்கினார்.

அதைப் பார்த்து இங்கிலாந்து அணியினர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். ஏனெனில் பந்து கேரியின் பேட்டில் படாமல் எப்படி ஸ்பைக் வந்திருக்கும் என்று இங்கிலாந்து அணியும் ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தனர். இறுதியில் ஸ்னிக்கோ மீட்டரில் ஏதோ தவறு இருப்பதாக அதனுடைய உரிமையாளர் ஒப்புக்கொண்டார். மறுபுறம் அந்த சாதகமான முடிவை பயன்படுத்திய கேரி தனது முதல் ஆஷஸ் சதத்தை அடித்து அசத்தினார்.

- Advertisement -

ஆஸிக்கு ஆப்பு:

அந்த நிலையில் அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 9, பேன் டக்கெட் 29, ஓலி போப் 3, ஜோ ரூட் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் ஹாரி ப்ரூக் 45 ரன்களில் அவுட்டான நிலையில் ஜேமி ஸ்மித் நிதானமாக விளையாட முயற்சித்தார். அப்போது பட் கமின்ஸ் வீசிய 45வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அவர் எட்ஜ் கொடுத்ததாக ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டார்கள்.

அதை ஏற்றுக்கொண்ட கள நடுவர்கள் 3வது நடுவரின் உதவியை நாடினார்கள். அதை சோதித்த போது பந்து ஸ்மித்தின் பேட்டை தாண்டும் போது ஸ்பைக் தெரிந்ததால் 3வது நடுவர் அவுட் என்ற தீர்ப்பை வழங்கியது இங்கிலாந்து ரசிகர்களை கோபமடைய வைத்தது. ஏனெனில் ஸ்மித் பேட்டுக்கும் பந்துக்கும் இடையே இருப்பது தெளிவாகத் தெரிந்தது.

இதையும் படிங்க: 4ஆவது போட்டி ரத்தானதால் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சாதகம் – விவரம் இதோ

அத்துடன் பந்து பேட்டை தாண்டுவதற்கு முன்பே ஸ்பைக் தெரிந்தது. அதனால் இது என்னப்பா பகல் கொள்ளையாய் இருக்கு? இதே போன்ற பந்தில் நேற்று கேரிக்கு அவுட் வழங்காத நடுவர்கள் இன்று ஸ்மித்துக்கு மட்டும் அநியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளதாக இங்கிலாந்து ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

Advertisement