4ஆவது போட்டி ரத்தானதால் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சாதகம் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

தொடரை இழக்கும் அபாயம் இந்திய அணிக்கு இல்லை :

அதனை தொடர்ந்து நேற்று டிசம்பர் 17-ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற இருந்த நான்காவது டி20 போட்டியானது கடுமையான பனிப்பொழிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. நேற்றைய போட்டி வழக்கமாக ஆரம்பிக்கும் நேரத்தை விட தாமதமான பிறகும் 9 மணி வரை போட்டி துவங்க வாய்ப்பு இருக்கிறதா? என்று அம்பயர்கள் காத்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் 9 மணியை கடந்தும் பனிப்பொழிவின் தாக்கம் குறையாததன் காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. அந்த கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும் தொடரை இழக்கும் அபாயம் இல்லை என்கிற கூடுதல் சாதகம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனாலும் டிசம்பர் 19-ம் தேதியான நாளை நடைபெறவுள்ள இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : மச்சான் வன்மராஜ் வந்துட்டான்.. சிஎஸ்கே பிளானை லீக் செய்ததை விமர்சித்த ரசிகர்களுக்கு அஸ்வின் பதில்

ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது டி20 தொடரையும் கைப்பற்றும் வாய்ப்பில் இந்திய அணி காத்திருக்கிறது.

Advertisement