காமன்வெல்த் கேம்ஸ் 2022: கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை, அணிகள் – எதில் பார்க்கலாம், முழுவிவரம்

Commonwealth Games Smiriti Mandhana Shafali Verma
- Advertisement -

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக போற்றப்படும் காமன்வெல்த் 2022 தொடர் இந்த வருடம் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் 20 ஓவர் போட்டிகள் இம்முறை சேர்க்கப்பட்டுள்ளது கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. மொத்தம் உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்த காமன்வெல்த் கிரிக்கெட்டில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பார்படாஸ் ஆகிய 4 அணிகளும் குரூப் பி பிரிவில் தொடரை நடத்தும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இதில் ஒவ்வொரு அணியுடன் மற்ற அணி தலா 1 முறை மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் மொத்தம் 12 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 2 பிரிவுகளிலும் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று பின்னர் இறுதி போட்டியில் தங்க பதக்கத்தை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணி வெள்ளிப் பதக்கத்தை வெல்லும். நாக்-அவுட் சுற்றில் தோல்வியடையும் 2 அணிகள் வெண்கலப் பதக்கத்துக்காக தனியாக ஒரு போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

இப்படி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தையும் படைக்கும் இந்த காமன்வெல்த் 2022 கிரிக்கெட் போட்டிகளின் முழு அட்டவணை இதோ (இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது, குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் அனைத்தும் இந்திய நேரப்படியாகும்)

ஜூலை 29, வெள்ளிக்கிழமை:
1. மதியம் 3.30 மணி, ஆஸ்திரேலியா vs இந்தியா
2. இரவு 10.30 மணி, பார்படாஸ் vs பாகிஸ்தான்
ஜூலை 30, சனிக்கிழமை:
3. மதியம் 3.30 மணி, நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா
4. இரவு 10.30 மணி, இங்கிலாந்து vs இலங்கை
ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை
5. மதியம் 3.30 மணி, இந்தியா vs பாகிஸ்தான்
6. இரவு 10.30 மணி, ஆஸ்திரேலியா vs பார்படாஸ்
ஆகஸ்ட் 2, செவ்வாய்க்கிழமை:
7. மதியம் 3.30 மணி, இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
8. இரவு 10.30 மணி நியூசிலாந்து vs இலங்கை
ஆகஸ்ட் 3, புதன்கிழமை:
மதியம் 3.30 மணி, ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
இரவு 10.30 மணி, பார்படாஸ் vs இந்தியா
ஆகஸ்ட் 4 வியாழக்கிழமை:
மதியம் 3.30 மணி, தென்னாப்பிரிக்கா vs இலங்கை
இரவு 10.30 மணி, இங்கிலாந்து vs நியூசிலாந்து
ஆகஸ்ட் 6, சனிக்கிழமை:
மதயம் 3.30 மணி, முதல் அரையிறுதிப் போட்டி
இரவு 10.30 மணி, 2-வது அரையிறுதிப் போட்டி
ஆகஸ்ட் 7, ஞாயிற்றுக்கிழமை:
மதியம் 2.30 மணி, வெண்கல பக்கத்திற்கான போட்டி
இரவு 9.30 மணி, தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டி

- Advertisement -

எதில் பார்க்கலாம்: இந்த போட்டிகள் முழுவதையும் இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியிலும் சோனி லிவ் மொபைல் ஆப் வாயிலாகவும் கண்டு களிக்கலாம்

இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் விவரங்கள் இதோ:
இந்தியா: ஹர்மன்பிரீட் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா ( துணை கேப்டன்), தானியா பாட்டியா (கீப்பர்), யாஸ்டிக்கா பாட்டியா (கீப்பர்), ஹர்லின் தியோல், ராஜேஸ்வரி கைக்வாட், சபினினி மேக்னா, ஸ்னே ராண , ஜெமிமா ரோட்ரிகஸ் , தீப்தி சர்மா, மேக்னா சிங், ரேணுகா சிங், பூஜா வஸ்திரகர் , ஷாபாலி வெர்மா, ராதா யாதவ்

- Advertisement -

பாகிஸ்தான்: பிஸ்மா மரூப் (கேப்டன்), முபீனா அலி (கீப்பர்), அனம் ஆமின், அமன் அன்வர், டயானா பைக், நிடா டார், குல் பெரோசா (கீப்பர்), தூபா ஹாசன், கைனட் இம்தியஸ், சாடியா இக்பால், இராம் ஜாவேட், ஆயிஷா நசீம், அலியா ரியாஸ், பாட்டிமா சனா, ஒமைமா சொஹைல்

ஆஸ்திரேலியா: மெக் லனிங் (கேப்டன்), ராக்சேல் ஹெயின்ஸ் ( துணை கேப்டன்), டார்கி பிரவுன், நிக்கோலா கேரி, அஸ்லே கார்டனர், கிரேஸ் ஹாரிஸ், அலிசா ஹெலி(கீப்பர்), ஜெஸ் ஜோனஸ்ஸன், அலனா கிங், தாஹிளா மக்ராத், பெத் மூனி, எல்லிஸ் பெரி, மேகன் ஸ்கட், அனபேல் சுதெர்லண்ட், அமண்டா ஜெட் வெலிங்க்டன்

- Advertisement -

இங்கிலாந்து: ஹெதர் நைட் (கேப்டன்), நட் ஸ்கிவர் (துணை கேப்டன்), மையா போச்சிர், கேத்தரின் பிரன்ட், அலிஸ் காப்சி, கேட் கிராஸ், பிரெயா டேவிஸ், சோபியா டுங்ளே, சோபி எக்லேஸ்டோன், சாரா கிளன், ஆமி ஜோன்ஸ், பிரெயா கெம், பிரயோனி ஸ்மித், இஸி ஒங், டேன்னி வ்யைட்

நியூஸிலாந்து: சோபி டேவின் (கேப்டன்), சுசி பேட்ஸ், ஈடேன் கார்சன், இஸி காஸ், கிளாடியா க்ரீன், மேடி க்ரீன், ப்ரோக் ஹாலிடே, ஹய்லே ஜென்ஸ்ன், பிரான் ஜோனஸ், எமெலியா கெர், ரோஸ்மரி மைர், ஜெஸ் மக்பட்யேன், ஜார்ஜ்யா ப்ளீம்மர் , ஹன்னா ரௌ, லீ டாஹுஹு

தென்ஆப்பிரிக்கா: சுனி லுஸ் (கேப்டன்), அண்ணேக் போஸ், திரிஷா செட்டி, லாரா கூடல், சினாலோ ஜாப்ட்டா , மேரிஜென் காப், அயபோங்கா காகா, மாசபடா கக்ளாஸ், நாடின் டீ க்ளெர்க், நோன்குலுலேக்கோ ம்லபா, மிக்னோன் டு ப்ரீஸ், டுமி சேகக்குனே, ஷபானும் இஸ்மாயில், ச்லோ ட்ரைன், லாரா வோல்வார்டட்

இலங்கை: சாமாரி அட்டப்பட்டு (கேப்டன்), நிலக்ஷி டீ சில்வா, கவிஷா டில்ஹாரி, விஷ்மி குணராட்னே, அமா காஞ்சனா, ஆச்சினி குலசூர்யா, சுகண்டிகா குமாரி, ஹாசினி பேரேரா, உடேஷிகா பிரபாதாணி, ஒஷாடி ரணசிங்கே , இனொகா ராணாவீரா, ஹர்ஷிதா சமரவிக்ரமா, அனுஷ்கா சஞ்சீவணி, மலஷா ஷேஹனி, ராஷ்மி சில்வா

இதையும் படிங்க : IND vs WI : டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் முக்கிய சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் – இந்திய அணி

பார்படாஸ்: ஹய்லே மேத்யூஸ் (கேப்டன்), அலியா ஆலினே, ஷானிகா ப்ருஸ், ஷை கேரிங்க்டன், ஷாண்டே கேரிங்க்டன், ஷமிலியா கானெல், டேந்த்ரா டோட்டின், கெயில் எலியட், திரிஷான் ஹோல்டர், க்யாஸி நைட், க்யாஷோனா நைட், அலிசா ஸ்கேட்ல்பூரி , ஷேரா செல்மான், டிபானி தோர்ப்பே, அலியா வில்லியம்ஸ்

Advertisement