வீடியோ : இவர படத்துக்கு கூட்டிட்டு போய் ஆஸ்கர் கொடுங்க.. ரிஸ்வானை நேரலையில் கலாய்த்த டௌல், ஹெய்டன், பதான்

Mohammed Rizwan
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் தங்களின் 2வது வெற்றியை பதிவு செய்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 344/9 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 122 ரன்களும் சமரவிக்கிரமா 108 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹசன் அலி 4 வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 345 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 12, பாபர் அசாம் 10 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து 113 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

ஆஸ்கரை மிஞ்சிய ரிஸ்வான்:
அவருடன் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய முகமது ரிஸ்வான் 131* ரன்களும் சவுத் ஷாக்கில் 31, இப்திகார் அஹ்மத் 22* ரன்களும் எடுத்ததால் 48.2 ஓவரிலேயே வென்ற பாகிஸ்தான் உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக உலக சாதனை படைத்தது. அந்தளவுக்கு சுமாராக செயல்பட்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய ரிஸ்வான் ஆட்டநாயகன் விருது வென்றார்.

முன்னதாக இப்போட்டியில் நீண்ட நேரமாக பேட்டிங் செய்த முகமது ரிஸ்வான் ஒரு கட்டத்திற்கு பின் தசைப்பிடிப்பை சந்தித்து தடுமாற்றமாக விளையாடினார். இருப்பினும் சிங்கிள், டபுள் ரன்கள் எடுக்கும் போது தடுமாற்றமின்றி தெளிவாக ஓடியது வர்ணனையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதன் காரணமாக “ரன்கள் எடுக்க தெளிவாக ஓடும் போது ரிஸ்வான் தெளிவாக செல்கிறார். ஆனால் தசைப்பிடிப்பு இருந்தால் உங்களால் இவ்வளவு தெளிவாக ஓடுவது அசாத்தியமாகும்” என்று இர்பான் பதான் நேரலையில் பேசினார்.

- Advertisement -

அந்த நிலைமையில் டீ சில்வா வீசிய ஒரு ஓவரின் கவர்ஸ் இசைக்கு மேல் செல்லும் அளவுக்கு முகமது ரிஸ்வான் அதிரடியான பவுண்டரி அடித்து அப்படியே நிற்க முடியாதது போல் விழுந்தது வர்ணனையாளர்களுக்கு மேலும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனால் அதை ரிப்ளையில் பார்த்த போது அடிக்கும் வரை நன்றாக இருந்த ரிஸ்வான் பந்தை அடித்த பின்பு வேண்டுமென்றே விழுவது போல் அடித்தது தெளிவாகத் தெரிந்தது.

அதனால் சிரிப்பை தாங்க முடியாத முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் “இவரை திரைப்படத்தில் நடிக்க அழைத்துச் செல்லுங்கள்” என்று நேரலையில் பேசி கலாய்த்தார். அதே போல “அவருக்கு அடுத்ததாக எங்கே கிளட்ச் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை” என மேத்தியூ ஹைடனும் கலாய்த்தார். இறுதியில் அதைப் பற்றி நேரடியாகவே சைமன் டௌல் கேட்ட போது “சில நேரங்களில் அது காயம் சில நேரங்களில்” நடிப்பு என ரிஸ்வான் வெளிப்படையாக சிரித்துக்கொண்டே சொன்னது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement