- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நாங்க பேட்டிங், பவுலிங்ல சொதப்புறோம். ஆனா இந்திய அணி இந்த குறிக்கோளோட மட்டுமே ஆடுறாங்க – நியூசி வீரர் புலம்பல்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது டி20 போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கடந்த போட்டியின் சூப்பர் ஓவர் தோல்வி குறித்து பேட்டியளித்த அந்த அணியின் துவக்க வீரர் முன்ரோ கூறுகையில் : நாங்கள் விளையாடும் விதம் மிகவும் சிறப்பாக இருந்தாலும் இறுதி நேரத்தில் பிரஷர் அதிகமாகி ஆட்டத்தை தோல்வியில் முடிக்கிறோம்.

- Advertisement -

அதேபோன்று கடந்த இரு போட்டிகளாகவே சூப்பர் ஓவர் வரை சென்றும் எங்களால் ஜெயிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. நியூசி அணி தற்போது இளம் பந்துவீச்சாளர்களை கொண்ட அணியாக இருப்பதனால்தான் சவூதி சூப்பர் ஓவரில் பந்துவீசினார் மேலும் அவர் சீனியர் வீரர் என்பதால் நிச்சயம் அவர் பந்து வீசி தான் ஆகவேண்டும். அதேபோன்று பேட்டிங் மற்றும் பவுலிங்கில் உள்ள குறைகளை நாங்கள் நீக்கியாக வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். இந்திய அணி மிகப்பெரிய அணி என்பது நாம் அறிந்ததே. அந்த அணியில் உள்ள வீரர்களும் தங்களது நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவதால் அவர்களை வீழ்த்துவது கடினமாக உள்ளது. மேலும் அவர்கள் வெற்றி ஒன்றையே இலக்காக நினைத்து தொடர்ந்து ஆடி வருவதால் அடுத்தடுத்த தொடர்களிலும் அவர்கள் வெற்றிபெற்று கொண்டே வருகின்றனர் என்று முன்ரோ கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by