இந்தியாவ குறை சொல்லாதீங்க.. சச்சினின் அந்த சாதனையை கோலி உடைப்பாரு.. லெஜெண்ட் டேவிட் லாய்ட்

David Llyod
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 13 வருடங்கள் கழித்து அந்நாட்டில் சமன் செய்த இந்தியா ஆறுதலான சாதனை படைத்தது. குறிப்பாக முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை கொடுத்த தெனாப்பிரிக்காவை 2வது போட்டியில் 55 ரன்களுக்கு சுருட்டி 7 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்த இந்தியா கேப் டவுன் மைதானத்தில் வெற்றியை பதிவு செய்த முதல் ஆசிய அணியாக சாதனை படைத்தது.

இருப்பினும் அந்த போட்டி ஒன்றரை நாட்களுக்குள் வெறும் 107 ஓவர்களுக்குள் முடிந்தது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. ஏனெனில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு முதல் நாளிலேயே ஆல் அவுட்டானது. அதே போல இந்தியாவும் 153/4 என்ற நிலைமையில் இருந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

குறை சொல்லாதீங்க:
அதனால் இதே மைதானம் இந்தியாவிலிருந்து இருந்தால் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டதாக வெளிநாட்டவர்கள் பேசுவார்கள் என சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர். இறுதியில் கேப் டவுன் பிட்ச் ஒரு தலைபட்சமாக திருப்தியற்றதாக இருந்தது என்று ரேட்டிங் வழங்கிய ஐசிசி ஒரு கருப்பு புள்ளியையும் தண்டனையாக கொடுத்தது. இந்நிலையில் கேப் டவுன் பிட்ச் மோசமாக இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் க்ளைவ் லாய்ட் தெரிவித்துள்ளார்.

அதே போல இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருந்தால் அதை யாரும் குறை சொல்லாதீர்கள் என்றும் தெரிவிக்கும் அவர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி கண்டிப்பாக உடைப்பார் என கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த பிட்ச்சில் எதுவும் தவறாக இருந்ததாக எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் அதே பிட்ச்சில் ஒருவர் சதமடித்தார். அது தான் போட்டியாகும்”

- Advertisement -

“ஒருவேளை இது இந்தியாவில் நடந்திருந்தால் மைதான பராமரிப்பாளர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். முதல் நாளில் நீங்கள் சற்று தோல்வியை சந்தித்தால் உடனடியாக பிட்ச்சை குறை சொல்ல பார்ப்பார்கள். குறிப்பாக இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருந்த போது அனைவரும் பிட்ச் பற்றி கடுமையான கருத்துக்களை சொன்னார்கள். எனவே நீங்கள் தரமான கிரிக்கெட்டை விளையாடினால் இவற்றையும் சரியாக கையாள வேண்டும்”

இதையும் படிங்க: இதெல்லாம் தேவையில்லாத ரெக்கார்டு.. தோனி மற்றும் கோலி ஆகியோருடைய மோசமான சாதனையை சமன் செய்த – ரோஹித் சர்மா

“விராட் கோலி எவ்வளவு காலம் விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இப்போதும் போதுமான இளமையை கொண்டிருக்கும் அவர் விளையாடும் விதத்திற்கு என்ன சாதிக்க விரும்புகிறாரோ அதை சாதித்துக் காட்ட முடியும். குறிப்பாக அந்த சாதனை (சச்சினின் 100 சதங்கள்) படைப்பதற்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement