4 ஓவரில் 15 ரன்..3 விக்கெட்..! கடைசியில் திட்டத்தை செயல்படுத்தினேன்.! பும்ரா சொன்ன ரகசியம்.!

bumrah
- Advertisement -

நடந்து வரும் ஐ.பி.எல் போட்டியில் அனைத்து அணிகளுமே பிளே ஆப் சுற்றிற்கு நுழையும் முனைப்பில் உள்ளது. நேற்று நடந்த பஞ்சாப் மற்றும் மும்பைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மும்பை அணியின் பும்ரா “போட்டியின் கடைசி ஓவர்களில் தெளிவு மிக முக்கியம் என்று கூறியுள்ளார்”

mumbai

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 வது லீக் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று(மே 16 ) நடைபெற்றது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி மும்பை அணியை பேட்டிங் செய்ய வைத்தது. இதன் பின்னர் களமிங்கிய மும்பை அணியின் முதல் 4 ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய க்ருனல் பாண்டியா மற்றும் பொல்லார்ட் கூட்டணி சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார்.

இறுதியில் மும்பை அணி 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்களை எடுத்து வெற்றியை நூலளவில் தவறவிட்டது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கே எல் ராகுல் 60 பந்துகளில் 94 ரன்களை எடுத்தார். மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா, பஞ்சாப் அணியின் முக்கியமான விக்கெட்டுகக்ளை எடுத்திருந்தார். 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

bumrah

இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய மும்பை அணியின் வீரர் பும்ரா “இந்த போட்டியில் தான் சிறப்பாக பந்து வீசியது மகழ்ச்சியளிக்கிறது. இறுதி ஓவர்களை வீசும் போது தெளிவும் திட்டமிடுதலும் அவசியம் அதில் நான் தெளிவாக இருந்தேன் . இந்த போட்டியில் ராகுல் சிறப்பாக விளையாடினர் அவருக்கு பந்து வீச சற்று கடினமாக இருந்தது. இதனால் நான் சரியாக திட்டமிட்டு பந்துகளை வீசினேன் , அந்த திட்டம் செயல்பட்டது. இறுதி ஓவர்களில் சற்று பந்தில் பிடிமானம் கிடைக்கவில்லை அதனால் நான் கொஞ்சம் மெதுவாக பந்தை வீசினேன் விக்கெட் விழந்தது ” என்று கூறியிருந்தார்.

Advertisement