1992 உ.கோ பாக் வென்றது நியாபம் இருக்கா – பும்ராவால் இந்தியாவுக்கு இழப்பில்லை, ரசிகர்களுக்கு முன்னாள் வீரர் தெம்பு

Bumrah
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை துவங்குவதற்கு இன்னும் 15 நாட்கள் கூட இல்லாத நிலையில் 2007க்குப்பின் கோப்பையை வெல்ல ரோகித் சர்மா தலைமையில் இறுதிக்கட்டமாக தயாராகி வந்த இந்தியாவிற்கு கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியுள்ளது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் தன்னுடைய வித்தியாசமான பௌலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து 3 வகையான இந்திய அணியிலும் நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் அவர் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பந்து வீச்சு துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார்.

IND Japrit Bumrah

- Advertisement -

அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் அனைத்து சூழ்நிலைகளிலும் தேவைக்கேற்ப சரியாக பந்து வீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படும் அவர் இப்படி கடைசி நேரத்தில் விலகியுள்ளது இந்தியாவின் உலகக்கோப்பை கனவை ஆரம்பத்திலேயே தகர்த்து விட்டதாக நிறைய ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஏனெனில் அவரை தவிர்த்து தேர்வு செய்யப்பட்டுள்ள புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் ஆகிய பவுலர்கள் வெறும் 130 கி.மீ வேகத்தில் மட்டுமே பந்து வீசுபவர்களாக இருப்பதுடன் கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இழப்பு இல்லை:
அதனால் வெற்றி கிடைப்பது கடினம் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறினாலும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பதற்காகவே இந்த வருடம் இந்தியா பங்கேற்ற பெரும்பாலான டி20 தொடர்களில் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக ஜஸ்பிரித் பும்ரா ஓய்வெடுதார். அப்போது அவர் இல்லாமலேயே அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இந்தியா முன்னேறியதையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதனால் பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடாது என்று தெரிவிக்கும் ரசிகர்கள் ஆனது ஆகட்டும் பார்த்து விடுவோம் என தைரியத்துடன் உள்ளனர்.

Bumrah 1

அதையே சுட்டி காட்டும் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா 1992 உலக கோப்பையில் கடைசி நேரத்தில் இதே போல நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வகார் யூனிஸ் காயத்தால் விலகிய போதும் பாகிஸ்தான் கோப்பையை வென்றதை போல் இந்தியாவாலும் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனால் பும்ரா எனும் ஒருவர் விலகியது பெரிய இழப்பல்ல எனக்கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த விசயத்தில் பதில் சொல்வது கடினமானது என்று உங்களுக்கு தெரியும். ஆனால் இதை எளிமையாக கடக்கவும் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவும் நான் ஒன்று சொல்கிறேன். இந்த வருடம் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமலேயே நாம் நிறைய போட்டிகளில் விளையாடினோம். குறைவான போட்டிகளில் மட்டுமே அவரை வைத்து விளையாடியும் இந்தியா சிறப்பாகவே செயல்பட்டது. எனவே அவருக்கு எந்த குறிப்பிட்ட வேலையும் கொடுக்கப்பட்வில்லை”

Ajay

“இந்தக் கோணத்தில் பார்க்கும்போது அதிர்ஷ்டவசமாக இந்திய அணிக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஜஸ்பிரித் பும்ரா போன்றவரின் இடத்தில் மற்றொருவரை நீங்கள் நிரப்ப முடியாது என்பது உண்மைதான். ஏனெனில் அவரிடம் தனித்துவம் உள்ளது. அதே சமயம் நமது அணியில் இணைந்துள்ள இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று உறுதியாக நம்பலாம். இந்த சமயத்தில் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கதையை நான் சொல்கிறேன். கடந்த 1992ஆம் ஆண்டு இதே ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை நடைபெற்றது”

இதையும் படிங்க: டி20 உ.கோ’யில் வெல்லப்போவது யார்? ஜாம்பவான் மைக்கேல் பெவன் தேர்வு செய்த 3 அணிகள் இதோ

“அந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியை இந்தியாவில் இருக்கும் நிறைய பேர் விரும்பமாட்டார்கள். அந்த உலகக் கோப்பையில் கோப்பையை வென்ற அணியிலும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டது. அதாவது அந்த சமயத்தில் வகார் யூனிஸ் எனும் இளம் வீரர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அற்புதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரும் ஜஸ்பிரித் பும்ரா போலவே அட்டாக் செய்யக்கூடிய பவுலர். ஆனால் பும்ரா போலவே அவரும் உலக கோப்பை துவங்குவதற்கு கொஞ்சம் முன்பாக முதுகுப் புறத்தில் சந்தித்த காயத்தால் கடைசி நேரத்தில் வெளியேறினார். ஆனாலும் அந்த தொடரில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது” என்று கூறினார்.

Advertisement