ஐ.பி.எல் தொடரிலிருந்து நான் விலக இதுதான் காரணம். வேறஎதும் இல்ல – இங்கிலாந்து வீரர் விளக்கம்

Woakes
- Advertisement -

இந்தியாவில் துவங்கிய ஐபிஎல் தொடரின் 14வது சீசனானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும், அணிகளைச் சேர்ந்த வீரர்களும் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

IPL

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார்கள் என்ற செய்தி வெளியானது. அதன்படி டேவிட் மலான, பேர்ஸ்டோ மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் அதனை மறுத்துள்ள டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிஸ் வோக்ஸ் தான் எதற்காக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன் என்பது குறித்து அவரே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தொடர்ந்து பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கவேண்டிய நெருக்கடி நிலைமை உள்ளதால் தான் ஐபிஎல் போட்டியில் இருந்து நான் வெளியேறுகிறேன்.

woakes 2

ஏனெனில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் நான் இடம் பெறுவேன் என்று எனக்கு தெரியாது. அதனால் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த ஐபிஎல் தொடரை விளையாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். ஐ.பி.எல் தொடரில் கலந்துகொண்டால் குறைந்த நாட்களில் அதிக போட்டிகளில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும்.

woakes

இதன் காரணமாக ஏதாவது ஒரு தொடரில் இருந்து விலக நினைத்தேன். அதனால் தான் நான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினேன். இந்த முடிவு எடுக்காவிட்டால் அடுத்து வரும் எந்த போட்டியிலும் நான் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதனாலேயே முன்னெச்சரிக்கையாக ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்ததாக கிரிஸ் வோக்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement