போனவருஷம் 16.25 கோடிக்கு ஏலம் போனாரு. இந்த வருஷம் ரிட்டயர்டு ஆயிட்டாரு – தெ.ஆ வீரர் எடுத்த முடிவு

Morris
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான கிறிஸ் மோரிஸ் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்து இருந்தார். 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கிறிஸ் மோரிஸ் 23 டி20 போட்டிகள், 44 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான இவர் பின் வரிசையில் இறங்கி பேட்டிங்கில் அதிரடி காண்பிக்க கூடியவர் என்பதால் ஒரு சிறப்பான ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார்.

morris 1

- Advertisement -

அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக உலகெங்கும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும் உலகெங்கிலும் நடைபெற்ற டி20 லீக் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.

கிறிஸ் மோரிஸ் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது கூட ராஜஸ்தான் அணியால் 16.25 கோடிக்கு வாங்கப்பட்டார். ஐ.பி.எல் போட்டிகளில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

இருப்பினும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவர் கடந்த ஐ.பி.எல் தொடரில் செயல்படவில்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 81 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 618 ரன்களையும், 95 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ ஒருநாள் தொடரில் செலக்ட்டான வாஷிங்டன் சுந்தர். விளையாடுவதில் சிக்கல் – அடப்பாவமே

இப்படி சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்த மோரிஸ் தனது 34-வது வயதில் இன்று அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே சற்று வருத்தம் அளிக்கும் இடமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement