தெ.ஆ ஒருநாள் தொடரில் செலக்ட்டான வாஷிங்டன் சுந்தர். விளையாடுவதில் சிக்கல் – அடப்பாவமே

Sundar-1
- Advertisement -

இந்திய அணியைச் சேர்ந்த இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை சுமார் 31 டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரை தவறவிட்டது மட்டுமின்றி டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடும் வாய்ப்பையும் அவர் தவறவிட்டார். இந்நிலையில் மேலும் சில மாதங்கள் அவர் கிரிக்கெட்டை தவறவிட இருக்கிறார்.

Sundar-1

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் 10 மாதங்களுக்கு மேல் கிரிக்கெட் களத்திற்கு திரும்பாமல் இருந்தார். அதனை தொடர்ந்து அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தருக்கு தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது.

இதன் காரணமாக அவர் இந்திய ஒருநாள் அணியில் விளையாட இருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரானது 19-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தற்போது மீண்டும் இந்த தொடரில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

sundar 1

ஏனெனில் தற்போது ஒருநாள் தொடருக்காக தயாராகி வரும் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறவே ஒரு வாரத்திற்க்கு மேல் ஆகிவிடும். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் அவரால் தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் இணைய முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமே விவோ ஐ.பி.எல் இல்லை. டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய இந்திய குழுமம் – எது தெரியுமா?

இதன் காரணமாக தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் அவர் விளையாட முடியாது என்றும் தெரிகிறது. இதன் காரணமாக இந்த தென் ஆப்பிரிக்க தொடரையும் அவர் தவற விட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement