4 பந்தில் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய 16 கோடி ரூபாய் ராஜஸ்தான் வீரர் – இவருக்கா சாம்சன் ஸ்ட்ரைக் தரல

Morris-2

இந்த ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதின. இப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இப்போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 7 விக்கெட் விழுந்திருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தவர்கள் கிறிஸ் மோரிஸும், உனாத்கட்டும் ஆவர்.

morris 1

19-வது ஓவரை வீச வந்தார் டில்லியின் பிரதான பாஸ்ட் பௌலரான காகிசோ ரபாடா. அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த மோரிஸ் அதே ஓவரின் 5வது பந்தில் மற்றுமொரு சிக்ஸ் அடித்தார். ஆனால் தனது பணி இன்னும் முடியவில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்த மோரிஸ் பொறுப்பாக கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்க வைத்துக் கொண்டார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. டாம் கரன் வீசிய அந்த ஓவரில் இரண்டாவது பந்தையும் நான்காவது பந்தையும் சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார் கிறிஸ் மோரிஸ்.

இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய மோரிஸ் 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்து, கடைசிவரை களத்தில் நின்று தன் அணியை வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம் சென்ற போட்டியில் தனக்கு ஸ்ட்ரைக் கொடுக்காத சஞ்சு சாம்சனுக்கு, எனக்கு பேட்டிங் விளையாடத் தெரியும் என்று நிரூபித்துள்ளார்.

morris

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக சென்று அந்த போட்டியிலும் கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், 5-வது பந்தை சிக்சருக்கு விலாச நினைத்த சாம்சனின் பேட்டில் பந்து சரியாக படவில்லை அப்போது நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த மோரிஸ் ஒரு ரன் எடுக்க ஓடி வந்தபோது அவரை வேண்டாம் என்று நிறுத்தி விட்டார் சாம்சன். பிறகு கடைசி பந்தை எதிர்கொண்ட சாம்சன் அந்த பந்தில் சிக்ஸ் அடிக்காமல் அவுட்டானார். எனவே அந்த போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் மோரிஸின் இந்த பொறுப்பான ஆட்டத்தைப் பார்க்கும்போது, கடந்த போட்டியில் சாம்சன் 5வது பந்தில் ஒரு ரன் ஓடி மோரிஸிர்க்கு ஸ்ட்ரைக் கொடுத்திருந்தால் கடைசி பந்தில் மோரிஸ் பவுண்டரியோ அல்லது சிக்ஸோ அடித்து அணியை வெற்றிபெற வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

Morris 3

நேற்றைய போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த மோரிஸ் அதற்கு முந்தைய போட்டியில் சாம்சன் தனக்கு ஸ்ட்ரைக் கொடுக்காததை பற்றி பேசியுள்ளார். இதைப் பற்றி அவர் கூறும்போது, அந்தப் போட்டியில் சாம்சன் விளையாடியது ஒரு கனவைப் போன்று இருந்தது. ஆனால் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுக்க நான் ஓடிய போது அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார். ஒருவேளை அவர் ஆறாவது பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்திருந்தார் என்றால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்க மாட்டேன் என்று கூறினார்.