சர்வதேச கிரிக்கெட்டில் நான் பந்துவீச கஷ்டப்பட்ட 2 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – கிரிஸ் மோரிஸ் பேட்டி

Morris
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கிரிஸ் மோரிஸ் கடந்த 2012ஆம் ஆண்டு அணிக்காக அறிமுகமாகி இதுவரை 23 டி20 போட்டிகள், 42 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர 2013 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் இதுவரை 79 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உலக அளவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளிலும் சரி தான் சந்தித்த கடினமான பேட்ஸ்மேன்கள் குறித்து அவரது பேட்டியை அளித்துள்ளார்.

morris 1

- Advertisement -

வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் பேட்டிங்கிலும் சிறப்பாக கை கொடுக்க கூடியவர் என்பதனால் நல்ல ஆல்-ரவுண்டராக பார்க்கப்படுபவர். கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவரால் இந்த ஐபிஎல் தொடரில் பெரிதளவு சோபிக்க முடியவில்லை. இதுவரை ரன்களை வாரி வழங்கி வரும் அவர் பேட்டிங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்கிற காரணத்தினால் கடந்த சில போட்டிகளாகவே வெளியில் அமர வைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் தான் பந்துவீசியதிலேயே கடினமான பேட்ஸ்மேன்கள் குறித்து பேசிய கிறிஸ் மோரிஸ் கோலியை ஜீனியஸ் என்று புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராத் கோலி உண்மையிலேயே ஒரு சிறப்பான பேட்ஸ்மேன். அவருடைய கிரிக்கெட் அறிவு அளப்பரியது. எந்த ஒரு பவுலர் எந்த நேரத்தில் எவ்வாறு வீசப் போகிறார் என்பதை முன்கூட்டியே கணித்து விளையாடும் அளவிற்கு கோலி பவுலரின் மனப்போக்கை கண்டிக்க கூடியவர்.

Kohli

அதனால்தான் அவரால் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. அதேபோன்று இந்திய அணியில் தற்போதைய வீரரான ஹார்டிக் பாண்டியா பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் : தனது சக நாட்டு வீரர் டிவில்லியர்ஸின் பேட்டிங்கையும் புகழ்ந்துள்ளார்.

- Advertisement -

abd 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : பேட்ஸ்மேன் என்று நினைத்த உடனே என் நினைவுக்கு வருவது டிவில்லியர்ஸ் மட்டும்தான். ஏனெனில் பந்துகளை மிகவும் க்ளீனாக அடிக்கும் திறனுடைய அவர் எந்தவித திசையிலும் பந்துகளை அடிக்கும் திறனுடையவர். இதுவரை நான் அவரது விக்கெட்டை வீழ்த்தியது இல்லை.

இதையும் படிங்க : நேற்றைய போட்டியின் 2 சிக்ஸர் விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

பல ஆண்டுகளாக நான் அவருக்கு எதிராக லீக் போட்டிகளில் பந்துவீசி இருந்தாலும் அவரை நான் அவரை வீழ்த்தியதே கிடையாது. எனக்கு அவரை எதிர்த்து எங்கு பந்து வீசுவது என்று தெரியாது. ஏனெனில் நான் வீசும் பந்துகளை எல்லாம் எல்லா இடத்திற்கும் அவர் அடித்துள்ளார் என்று கிரிஸ் மோரிஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement