நேற்றைய போட்டியில் ஏன் ஹார்டிக் பாண்டியா பந்துவீசவில்லை – காரணத்தை சொன்ன சீனியர் வீரர்

Krunal

ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரின் கடைசி பந்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

RcbvsMi-1

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் 48 ரன்களையும், மேக்ஸ்வெல் 39 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோன்று இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோற்று ஒரு மோசமான சாதனையை சந்தித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆன ஹர்டிக் பாண்டியா பந்துவீசாதது குறித்து தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதில் அளித்த மும்பை அணியின் சக வீரரான கிறிஸ் லின் கூறுகையில் : ஹார்திக் பாண்டியா நேற்று பந்துவீச இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

Pandya

அவருடைய தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள சிறிய சுளுக்கு காரணமாகவே அவர் நேற்றைய போட்டியில் பந்து வீச முடியவில்லை. ஒருவேளை பந்துவீசி காயம் பெரிதாக ஆனால் அது அணிக்கு பாதகமாக அமையும் என்ற காரணத்தினாலேயே ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நேற்றைய போட்டியில் அவர் பந்து வீசவில்லை என கிறிஸ் லின் தெரிவித்தார். மேலும் அணியில் உள்ள மருத்துவ அதிகாரிகள் நிர்வாகிகள் அனைவரும் பாண்டியாவின் பிட்னஸ்ஸை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

- Advertisement -

அவர் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதாலும் அவரை ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக அணியில் விளையாட வைக்கிறார்கள். தற்போது துவக்க போட்டிகளில் ஆறாவது பவுலரை நாங்கள் இழந்தாலும் இனி வரும் போட்டிகளில் அவர் காயத்திலிருந்து மீண்டு வந்துவிடுவார் என்று கிறிஸ் லின் கூறினார். ஹார்டிக் பாண்டியா நேற்றைய போட்டியில் 10 பந்துகளை சந்தித்து 13 ரன்களை மட்டுமே அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.