RCB vs KKR : மைதானத்தை விட்டு வெளியே அடித்து பந்தை தொலைத்த கொல்கத்தா வீரர் – வீடியோ

நேற்றைய கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரண்டாவதாக ஆடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரரான க்றிஸ் லின் அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

Lynn
- Advertisement -

நேற்றைய பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பிரமாண்டமான இலக்கினை எதிர்த்து இரண்டாவதாக ஆடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் க்றிஸ் லின் சிறப்பாக ஆடினார். அதிலும் குறிப்பாக அவர் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தை விட்டு வெளியே சென்றது. அந்த சிக்ஸரை வருணித்து வர்ணனையாளர்கள் பந்து ஆர்பிட் வலயத்திற்குள் சென்றுவிட்டது என்றே கூறினர். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி. எல் தொடரின் 17 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 84 ரன்களை அடித்தார்.

பிறகு 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ற்றங்களை அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பாக க்றிஸ் லின் 43 ரன்களும், ரஸ்ஸல் 48 ரன்களும் அடித்தனர். இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதையும் படிக்கலாமே :

- Advertisement -

Dinesh Karthik : ரஸல்க்கு நாங்கள் தரும் இடமே அவர் சிறப்பாக விளையாட காரணம் – தினேஷ் கார்த்திக்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Advertisement