என்னது நான் ரிட்டயர்டு ஆயிட்டனா ? ச்சேன்ஸ்ஸே இல்ல – விளக்கத்தை கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய கெயில்

Gayle-2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற லீக் போட்டியோடு அந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் உலகெங்கிலும் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இதே போட்டியில் கெயிலும் ஓய்வு பெற்று விட்டாரோ என்று நம்மில் பலரும் நினைத்திருக்கலாம்.

Gayle

ஏனெனில் கெயில் ஆட்டமிழந்து வெளியேறியபோது வீரர்கள் அனைவரும் கட்டியணைத்தது வரவேற்பு கொடுத்தனர். அதுமட்டுமின்றி கெயில் தனது ரசிகர்களுக்கு அன்பு பரிசினை வழங்கியது, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது போன்ற வித்யாசமான செயல்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமின்றி அவரும் ஓய்வு பெற்று விட்டாரோ என்ற சந்தேகம் எழுந்தது.

- Advertisement -

இந்த உலக கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 45 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பியதால் நிச்சயம் இந்த தொடருடன் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்க்கும்போது அவர் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர் இன்னும் தான் ஓய்வு பெறவில்லை என்று தற்போது தெரிவித்துள்ளார்.

gayle 1

இது தொடர்பாக பேசிய அவர் : நான் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கும், எனது அணிக்கும் இந்த தொடர் மிகவும் மோசமாக அமைந்துவிட்டது. இருப்பினும் நான் இன்னும் ஒரு டி20 உலக கோப்பையில் விளையாட விரும்புகிறேன். ஆனால் அதற்கு என்னை அனுமதிக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : இந்த உலகக்கோப்பை தொடரில் 3-ஆவது ஹாட்ரிக்கை வீழ்த்திய ரபாடா – அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கெயில் 2019ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இருப்பினும் தற்போது வரை டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடும் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை வரை தான் ஓய்வு அறிவிக்க விரும்பவில்லை என்றும் அந்த உலகக் கோப்பை தொடருடன் ஓய்வுபெற இருப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement