- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ட்ரெண்ட்செட்டர் முக்கியம்.. தோனி, கோலி, ரோஹித் ஆகியோரில் சிறந்த இந்திய கேப்டன் யார்? கிறிஸ் கெயில் பதில்

இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்துள்ளது. அதே போல 2023 உலகக் கோப்பையில் ஃபைனல் வரை சென்ற இந்தியா சமீபத்தில் கான்பூரில் டிராவில் முடிவடைய வேண்டிய டெஸ்ட் போட்டியில் சரவெடியாக விளையாடி வெற்றி பெற்றது. அந்த வகையில் சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் எதிரணியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை ரோஹித் சர்மா பின்பற்றுகிறார்.

அதைப் பின்பற்றி 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி அதிரடியாக செயல்படுவதால் ரோஹித் சர்மாவை சிறந்த கேப்டன் என்று பலரும் பாராட்டுகின்றனர். அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த சூழ்நிலையிலும் டிராவிற்காக விளையாடாமல் வெற்றிக்காக விளையாட வேண்டும் என்ற நிலைமையை விராட் கோலி உருவாக்கினார். அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா வென்றது.

- Advertisement -

சிறந்த கேப்டன் யார்:

அதனால் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் விராட் கோலி தலைமையில் இந்தியா மகத்தான வெற்றிகளை பெற்றது. மேலும் ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலைமையையும் விராட் கோலி உருவாக்கினார்.

அதற்கு முன்பாக 2007ஆம் ஆண்டு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் இந்திய அணியை அற்புதமாக வழி நடத்திய தோனி டி20 உலகக் கோப்பையை வென்றார். மேலும் 2011 உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்ற அவருடைய தலைமையில் இந்தியா முதல் முறையாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறியது.

- Advertisement -

ட்ரெண்ட்செட்டர் தோனி:

இந்நிலையில் தோனி தான் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் கிறிஸ் கெயில் கூறியுள்ளார். குறிப்பாக தொடர்ச்சியாக வெற்றிகளை பெறும் டிரெண்டை தோனி உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அதை விராட் கோலி, ரோஹித் சர்மா தொடர்வதாக தெரிவிக்கும் அவர் இது பற்றிய கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஜாக்கிரதையா இருக்க சொன்னாங்க.. பயமே இல்லாம அவரை அவுட்டாக்குனேன்.. இந்தியாவை எச்சரித்த வங்கதேச வீரர்

“தோனி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன். உண்மையில் அவர் தான் இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமான ட்ரெண்ட் செட்டை உருவாக்கினார். அதன் பின் ஒட்டுமொத்தமாக ரோஹித் சர்மா தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வருகிறார். விராட் கோலியும் கேப்டன்ஷிப் வேலையில் அசத்தினார்” என்று கூறினார். அத்துடன் தாம் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்கள் யாரும் இல்லை என்றும் கிறிஸ் கெயில் தெரிவித்தார். பவுலர்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் தாம் அதை விட கடினமான பேட்ஸ்மேன் என்று அவர் ஜாலியாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -