இனிவரும் எல்லா போட்டிகளிலும் பஞ்சாப் அணி ஜெயிக்கும். முடிஞ்சா தடுத்து பாருங்க – எச்சரித்த அதிரடி வீரர்

KXIP
- Advertisement -

இந்த வருட ஐ.பி.எல் தொடரில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரிய அளவில் சாதிக்கும் என்று நம்பிக்கை வைத்த அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் இந்த ஆண்டு அவர்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே அமைந்துள்ளது. புதிய கேப்டனாக ராகுல், புதிய பயிற்சியாளராக கும்ப்ளே ஆகியோர் தலைமையில் சிறப்பாக விளையாடும் என்று கருதப்பட்ட அணி பஞ்சாப்.

Rahul

- Advertisement -

ஆனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி 7 போட்டிகளில் 6 போட்டியில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் பஞ்சாப் அணி ஒருவேளை தோற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முற்றிலும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணிக்கும் இடையேயான 31 ஆவது லீக் போட்டி சார்ஜா மைதானத்தில் தற்போது துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

kxipvsrcb

இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்காக கெயில் களம் இறங்குவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முக்கிய மாற்றமாக கிரிஸ் கெயிலை அணிக்குள் மீண்டும் வந்துள்ளார். இந்நிலையில் போட்டிக்கு முன்பாக பேட்டியளித்த கிரிஸ் கெய்ல் கூறுகையில் : “நாங்கள் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறோம் என்பது தெரியும், இருந்தாலும் எங்களுக்கான வாய்ப்பு இன்னமும் உள்ளது.

gayle

அணியின் அனைத்து வீரர்களும் தங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றிக்காக பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement