- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதை ஒரு குறையா சொல்லி சர்பராஸ் கானை கழற்றி விடாதீங்க.. வெ.இ தொடரில் 100% ஆடனும்.. கெய்ல் பேட்டி

மும்பையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் கடந்த சில வருடங்களாகவே உள்ளூரில் சிறப்பாக விளையாடி வந்தார். இருப்பினும் ரஹானே, புஜாரா போன்ற சீனியர்கள் இருந்ததாலும் சர்பராஸ் கான் உடல் பருமனாக இருந்ததாலும் தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை. ஆனால் மனம் தளராமல் தொடர்ந்து உள்ளூரில் போராடிய அவருக்கு 2024 இங்கிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தது.

அந்த வாய்ப்பில் அடுத்தடுத்த அரை சதங்களை சர்பராஸ் அடுத்து நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் முதல் போட்டியிலேயே 150 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் அதற்கடுத்தப் போட்டிகளில் பெரிய ரன்களை அடிக்காத அவர் வெளிநாடுகளில் அசத்த மாட்டார் என்று தேர்வுக்குழு கருதுகிறது. அதனால் அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

அதெல்லாம் குறையில்ல:

இருப்பினும் இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் சர்பராஸ் அரை சதங்கள் அடித்து தம்மால் வெளிநாட்டிலும் அசத்த முடியும் என்று நிரூபித்தார். இதற்கிடையே கடினமாக உழைத்த அவர் 17 கிலோ அளவுக்கு தம்முடைய உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக மாறியுள்ளார். எனவே அடுத்தது நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உள்ளூரில் முச்சதம் அடித்து இந்தியாவுக்காக சதத்தை அடித்துள்ள சர்பராஸ் கானை உடல்பருமனாக இருக்கிறார் என்று சொல்லி கழற்றி விடாதீர்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். தம்மைப் பொறுத்த வரை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் விளையாடுவதற்கு 100% தகுதியானவர் என்றும் கெய்ல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கெய்ல் ஆதரவு:

இது பற்றி கெய்ல் பேசியது பின்வருமாறு. “சர்பராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடியும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பாக அவரைப் பற்றி சில பதிவுகளை நான் பார்த்தேன். அதில் அவர் தன்னுடைய எடையைக் குறைத்துள்ளார். உண்மையில் அவர் அந்தளவுக்கு பருமனாக இல்லை”

இதையும் படிங்க: என்னா மனுஷன்யா 26.8 லட்சம்.. கேரளாவில் அப்படியே தூக்கி கொடுத்த சஞ்சு சாம்சன்.. ரசிகர்கள் பாராட்டு

“அவருடைய எடை அல்லது வேறு ஏதேனும் விஷயங்களில் எந்த பிரச்சினையுமில்லை. நன்றாக இருக்கும் அவர்கள் இப்போதும் ரன்கள் அடிக்கிறார். எனவே உள்ளூரில் முச்சதம் அடித்துள்ள அவருக்கு எதிராக உடல் எடையைப் பற்றி யாராவது பேசினால் அது சோகத்துக்குரியது. அவருக்கு எதிராக யாரும் எடையைக் காரணமாக பயன்படுத்தக்கூடாது. அவர் 100% அணியில் இருக்க வேண்டும். இந்தியாவில் ஏராளமான திறமை இருக்கிறது. ஆனால் அவருக்கும் வாய்ப்பு கொடுங்கள்” என்று கூறினார்.

- Advertisement -