41 வயதில் “யுனிவர்சல் பாஸ்” கிறிஸ் கெயில் படைத்த சாதனை – உண்மையிலே வயசு இவருக்கு ஒரு நம்பர் தான்

Gayle

நடப்பு ஐபிஎல் தொடரில் நடந்த நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 221 ரன்கள் அடிக்க, 222 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி கடைசி பந்து வரை இரு அணிகளுக்கும் சம வாய்ப்போடு சென்றதால் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

rrvspbks

இப்போட்டி கிறிஸ் கெயிலின் 133வது ஐ.பி.எல் போட்டியாகும். இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஒன்டவுன் ஆர்டரில் களமிறங்கிய கிறிஸ் கெயில் துவக்கம் முதலே வழக்கம் போல் தனது அதிரடியை வெளிப்படுத்தினார், ஸ்டோக்‌ஸ் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து ஐபிஎல் தொடரில் 350 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் டி வில்லியர்ஸ் இருக்கிறார்.

நேற்று இரண்டு சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியில் முதலிடத்தில் உள்ளார். கிறிஸ் கெயில் 351 சிக்ஸர்கள், ஏபி டிவில்லியர்ஸ் 237 சிக்ஸர்கள், தோணி 216 சிக்ஸர்கள் அடித்து முதல் மூன்று இடத்தில் உள்ளனர். இனியும் யாரும் எட்ட முடியா எண்ணிக்கையில் அவர் சிக்ஸர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

gayle 2

கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் சராசரியாக ஒவ்வொரு 9.11 பந்துகளுக்கும் சிக்ஸ் அடித்துள்ளார். கடந்த நான்கு சீசன்களாக பஞ்சாப் அணிக்காக தான் விளையாடிய முதல் போட்டிகளிலேயே அரைசதம் அடித்துக்கொண்டிருந்த கிறிஸ் கெயில் நேற்றைய போட்டியில் அதை நிறவேற்ற தவறிவிட்டார். ஆனால் ஐபிஎல்லில் 350 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்ததால் யுனிவர்சல் பாஸ் வெரி ஹேப்பி அண்ணாச்சி.

- Advertisement -

gayle 1

வயது மூப்பின் காரணமாக கடந்த ஐ.பி.எல் தொடரில் முற்பாதியில் பல போட்டிகளை தவறவிட்ட அவர் பிற்பாதியில் அணியில் இடம் கிடைத்ததும் தனது திறமையை நிரூபித்தார். அதனால் இந்தாண்டு முதல் போட்டியில் இருந்தே அவரை ராகுல் அணியில் விளையாட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.