எனக்கு முன்னாடி நீங்க இந்த முடிவை எடுப்பீங்கனு நான் நெனச்சி கூட பாக்கல – பொல்லார்டு குறித்து கெயில் பதிவு

Pollard
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான கைரன் பொல்லார்டு நேற்று இரவு திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஷாக்கிங் செய்தியாக அமைந்தது. ஏனெனில் 34 வயதே ஆன பொல்லார்டு இன்றளவும் உலக அளவில் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேனாக வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில் அவர் இப்படி திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையிலாவது அவர் விளையாடி இருக்க வேண்டும் என்று ரசிகர் ஆதங்கப்படும் அளவிற்கு அவர் இந்த திடீர் முடிவை அறிவித்துள்ளார். மேலும் தான் ஓய்வு பெறுவது குறித்து வெளியிட்டுள்ள அந்த பதிவில் : நான் சிறு வயதில் இருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அதன்படி தற்போது 15 வருடங்கள் எனது அணிக்காக விளையாடியதில் மகிழ்ச்சி. என்னுடைய இடத்திற்கு பல இளம் வீரர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அவர்களும் வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது மட்டுமின்றி தற்போது நான் அணியில் இருந்து விலகினால் அந்த இடத்தில் சரியான வீரர்கள் நிரப்பப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே தான் இந்த முடிவை எடுத்ததாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதன் காரணமாக அவரது இந்த சுயநலமற்ற முடிவிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. மேலும் பொல்லார்டின் இந்த ஓய்வு முடிவை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அவருடன் விளையாடிய சக வீரரான கிறிஸ் கெயில் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் பொல்லார்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : எனக்கு முன்னதாகவே நீங்கள் ஓய்வு முடிவை அறிவித்ததை என்னால் நம்ப முடியவில்லை. இருப்பினும் உங்களுடைய சர்வதேச கிரிக்கெட் சிறப்பாக நிறைவடைந்ததற்கு வாழ்த்துக்கள். உங்களுடன் விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி ஹாப்பி ரிட்டயர்மென்ட், ஆல் த பெஸ்ட் ஃபார் நெக்ஸ்ட் சாப்டர் என்று கிரிஸ் கெயில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பெரிய ஹிட்டர்ன்னு சொன்னாங்க. ஆனா இதுவரைக்கும் அவரு ஒன்னும் பண்ணல – வெ.இ வீரரை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமான கைரன் பொல்லார்டு 123 ஒருநாள் போட்டிகளிலும், 101 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதேபோன்று ஐ.பி.எல் தொடரில் 2010 ஆம் ஆண்டு மும்பை அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 184 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement